தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திருவண்ணாலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள திருவண்ணாமலை வந்திருந்தார். முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்க்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்,புதிய ஆயுஷ் கட்டிடங்கள் மற்றும் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 380 அக்சிஜன் படுக்கை பிரிவு ஆகியவற்றை திறந்து வைத்தார்.
 
திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள், மருத்துவ வசதிகள் குறித்த ஆய்வினை நேரில் சென்று பார்வையிட்டு கொரோனா அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் கொரோனா மூன்றாவது அலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் வார்டு ஆகிய பிரிவுகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நபர்களுக்கு தொடந்து சிகிச்சைகள் அளிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா பின்விளைவு புறநோயாளிகள் சிறப்பு மருத்துவ பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.


 



பின்னர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பில் 20 இருக்கைகள் கொண்ட இரண்டு மருத்துவ பல்நோக்கு வாகனங்களை பயன்பாட்டிற்காக அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர், அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு கால் இழந்த பெண்ணுக்கு செயற்க்கை கால் மற்றும் 110 பயனாளிகளுக்கு காது கேட்டுக்கும் செவித்திறன் கருவிகளை அமைச்சர்கள் வாங்கினார்கள்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‛‛ திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 900 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ள நிலையில் மேலும் தற்போது 700 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 26,411 கர்பிணி தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்துள்ளனர் என்றும்,அதிகமான பரிசோதனைகள் செய்து வரும் மாநிலமாக தமிழகம் இருந்து வந்துள்ளது.


 



ஜீலை 25க்குள்ள முழுமையான தடுப்பூசி போடப்பட்ட நகராட்சியாக திருவண்ணாமலை நகராட்சியை மாற்ற முழு நடவடிக்கைகளை மேற்க்கொள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றது.தமிழகம் முழுவதிலும் 90 சதவிகிதம் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அனைத்து மருத்துவமனைகளிலும் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது. என்றம் 75 இடங்களில் சித்தா,ஆயுர்வேதா,யுனானி,ஹோமியோபதி சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும்,அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,


அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா பின்விளைவு புறநோயாளிகள் சிறப்பு மருத்துவ பிரிவையும் அமைத்துள்ளதாகவும்,கொரோனா 3வது அலையை தமிழகம் எளிதாக எதிர்கொள்ளும் அளவிற்க்கு சிறப்பான கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது என்றும்,


 



தமிழக முதல்வர் கொரோனாவினை எதிர்கொள்ள மக்கள் இயக்கம் என்று ஏற்படுத்திய அந்த ஒருவார்த்தை பெரிய அளவில் தமிழகத்தில் நோய்தொற்றை குறைக்க உதவியது என்றும்,பல்வேறு இடங்களில் பலதரப்பட்ட மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் திட்டத்தினை தமிழக முதல்வர் தொடங்கி வைத்ததின் விளைவாக வெகு வேகமாக இரண்டாம் அலை தமிழகத்தில் கட்டுக்கு கொண்டு வரப்பட்டது.


என்றும் திருவண்ணாமலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.