Thiruvannamalai: வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற பட்டதாரி திடீர் மரணம்; சடலத்தை கொண்டு வர முதல்வருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை

மலேசியாவிற்கு வேலைக்கு சென்ற நபர் திடீர் மரணம். மகனின் சடலத்தை கொண்டு வர தமிழக முதல்வருக்கு விவசாயி கண்ணீர் மல்க கோரிக்கை.

Continues below advertisement

திருவண்ணாமலை ( Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு ஊராட்சிக்குபட்ட ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி தேசிங்கு மூத்த மகன் சம்பத்குமார் வயது (37). இவர் எம்.இ மெக்கானிக்கல் இஞ்சினியர் படிப்பை முடித்துவிட்டு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தனியார் ஏஜென்டுகள் மூலம் மலேசியா நாட்டில் உள்ள தனியார் மெட்டல் கம்பெனிக்கு பணிபுரிவதாக சென்றுள்ளார். மேலும்,  சம்பத்குமாருக்கு திருமணமாகி ரேணுகா என்ற மனைவியும் ரித்திகா மற்றும் யாஷிகா என்ற இரண்டும் மகளும், வேதநாத் என்ற ஒரு மகனும் உள்ளனர். சம்பத்குமார் தினமும் இரவில் தனது குடும்பத்தாரிடம் வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் பேசி வருவதாகவும் இவர் இறுதியாக (29.06.23) அன்று இரவு பேசியதாகவும் கூறப்படுகின்றது. 

Continues below advertisement

தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்: ஹரியானாவை வீழ்த்திய தமிழ்நாடு.. நேரில் வாழ்த்திய முதல்வர்!

 


 

இந்நிலையில், மறுநாள் (30.06.23) அன்று காலையில் மலேசியாவிலிருந்து விவசாயி தேசிங்கு குடும்பத்தினருக்கு சம்பத்குமார் மாரடைப்பு காரணத்தினால் இறந்துவிட்டதாக அங்கு உள்ளவர்கள் கூறினார்கள். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது சம்மந்தமாக தமிழக வெளிநாடு வாழ், தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் நேரில் சென்று தங்களுடைய மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை வேண்டியும், மகனின் சடலம் விரைவாக இந்தியா கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அமைச்சரிடம் மனு அளித்தனர்.

 


நமக்குள்ள இருக்க உறவு பாதிச்சுரும்.. பாத்துக்கோங்க..அமெரிக்க, கனடா நாடுகளிடம் கறார் காட்டும் வெளியுறவுத்துறை அமைச்சர்.!

இதுவரை 4 நாட்கள் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால் தமிழக முதல்வர் தலையீட்டு தனது மகனின் சடலத்தை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், தனது மகனின் சாவில் சந்தேக இருப்பதால் நீதி விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோருக்கு விவசாயி கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

Continues below advertisement