திருவண்ணாமலை தாலுக்கா அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாலுக்கா அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலர் சிவா தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசுகையில், ”வேளாண்மை துறையில் ஊழல் நடப்பதை பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறையில் தான் இந்த இரண்டு துறைகளிலும் அரசு சார்பில் பல்வேறு மானிய திட்டங்கள் அதிக அளவில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இத்திட்டங்கள் அனைத்தும் முழுமையாக விவசாயிகளைச் சென்று அடைவது கிடையாது. கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால் ஒரு ஒருங்கிணைப்பாளர்கள் மூத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இதுகுறித்த தகவல் பால் கூட்டுறவு சங்க செயலாளருக்கு மட்டும், ஆவின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார். பால் உற்பத்தியாளர்களுக்கு விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அடுத்த கூட்டம் நடத்தும்போது அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கும் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துரிஞாபுரம் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பல கோடி முறைகேடுகள் நடந்துள்ளது. இதுகுறித்து அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை உரிய விசாரணை செய்து தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.
அதேபோன்று வந்தவாசி தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் பேசிய விவசாயிகள்: மகளிர் உதவித்தொகை கிடைக்க பெறாதவர்கள் ஒரு மாதம் வரை மேல் முறையீடு செய்யலாம் என அரசு தெரிவித்துள்ளது. இதற்காக மகளிர் உதவித்தொகை கிடைக்காத கிராமப்புற மக்கள் இ-சேவை மையங்களுக்கு சென்று பதிவு செய்து நாள் முழுவதும் காத்துக் கிடக்கின்றனர். பதிவு செய்வதற்காக மையங்களில் 100 முதல் 200 வரை வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர். வந்தவாசி பஜார் வீதியில் உள்ள இந்தியன் வங்கி முன்பு வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாததால் பொதுமக்கள் அனைவரும் சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு வங்கிக்கு செல்கின்றனர். இவர்கள் வங்கியில் இருந்து வெளியே வருவதற்கு மணி கணக்கில் காலதாமதம் ஆகிறது. இதனால் வங்கி முன்பு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் இற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வந்தவாசி செய்யாறு சாலையில் உள்ள புலிவாய் அருகே சாலையின் ஓரத்தில் வந்தவாசி நகராட்சி குப்பைகள் கொட்டப்படுகிறது.
இதனால் அந்த வழியாக பொதுமக்கள் பயணிக்க முடியவில்லை, செய்யார் கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியின் மதகு பழுதடைந்துள்ளது இது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை தொடர்மழை காரணமாக ஏரியின் மதகு உடையும் அபாயத்தில் உள்ளது மதகு உடைந்தால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் மெடிக்கல் ஆபீஸராக டாக்டர் சிவப்பிரியா பணிபுரிந்து வருகிறார் இவர் வந்தவாசி பகுதி ஏழை மக்களுக்காக இரவு பகல் பாராமல் எந்த நேரமும் வந்து பணி செய்து வந்தார் இவரை இங்கிருந்து திடீரென வெளி ஊருக்கு மாற்றம் செய்துள்ளார் அவரை மீண்டும் வந்தவாசி மருத்துவமனை பணியாற்ற அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினார்.