திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலையில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி உயிருக்கு பாதுகாப்பு கேட்டு புதுமண காதல் ஜோடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.


திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன் வயது (26). இவர் தொழிற்படிப்பு முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சௌமியா வயது (20). பூவரசன் சௌமியா இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது முதல் இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். சில நாட்கள் பிறகு  காதலாக மாறியுள்ளது. பூவரசன் சௌமியா ஆகிய இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். இந்நிலையில், பூவரசன் மற்றும் சௌமியா காதலித்து வந்தது இருவரின் வீட்டிற்கும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பிறகு இருவரின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 


 




இதனால் மனமுடைந்த இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களது திருமணம் பெண் வீட்டாருக்கு தெரிய வந்த நிலையில் பெண்ணின் வீட்டார் இவர்களை தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புதுமண காதல் ஜோடி தங்களது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் தங்களது வீட்டில் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர். இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஏற்பட்டு புதுமண காதல் ஜோடி உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.” உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்