திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் காலை வரையில் இடி, மின்னலுடன், பலத்தமழை பெய்து வந்தது. இதனால் பள்ளங்கள் மற்றும் வயல்வெளிகள் போன்றவற்றில் மழைநீர் நிரம்பியது. திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து கிடங்குக்கு ஏற்றிச்செல்வதில் தாமதம் ஏற்பட்டதால், நூற்றுக்கணக்கான கோதுமை மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பறிமாற்றம் செய்வதற்காக 2,600 மெட்ரிக் டன் கோதுமை, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து நேற்று அதிகாலை திருவண்ணாமலைக்கு சரக்கு ரயில் மூலம் வரவைக்கப்பட்டது. பின்னர், சரக்கு ரயிலில் வந்த கோதுமை மூட்டைகள் இறக்கி இறக்கி வைக்கப்பட்டன. பின்னர் கோதுமையை உடனடியாக மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யவில்லை.
திருவண்ணாமலை அடுத்த புதுமண்ணை கிராமத்தில் உள்ள இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளுக்கு, கோதுமை மூட்டைகளை ஏற்றிச்செல்ல ஒப்பந்தம் செய்யப்பட்ட லாரிகளை பணியில் ஈடுபடுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, ரயில் நிலைய பிளாட்பாரத்தில் திறந்தவெளி பகுதிகளில் கோதுமை மூட்டைகள் அனைத்தும் கேட்பாரற்று வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று இரவு 12 மணியளவில் தொடங்கிய மழை காலை வரை பெய்த கனமழையால். கோதுமை மூட்டைகள் அனைத்தும் மழை நீரில் நினைந்து சேதமடைந்தது. கோதுமை மூட்டைகள் சிதைந்து, அனைத்தும் ரயில் செல்லும் தண்டவாள பகுதியில் சிதறிக்கிடந்தன. அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் வெளியூர் செல்வதற்கு ரயில் நிலையத்துக்கு சென்ற பொதுமக்கள் கோதுமை கீழே சிதறி வீணகுவதை கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். இதனையடுத்து ரயில் நிலைய அதிகாரிகள் புதுமண்ணையில் உள்ள இந்திய உணவு பொருள் பாதுகாப்பு கிடங்கிள் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன் பிறகு அதிகாரிகள் மழையில் நனைந்த கோதுமை மூட்டைகளை இந்திய உணவு பொருள் பாதுகாப்பு கிடங்கிளுக்கு ஏற்றி சென்றனர்.
அதன் பிறகு அங்கிருந்து, ரேஷன் கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். ஆனால், கிடங்குகளில் பணிபுரியும் அதிகாரிகளின் அலட்சியத்தால், விவசாயிகளின் வியர்வையில் விளைந்த கோதுமைகள் மாநிலம் கடந்து வந்த பிறகு மழையில் நனைந்து சேதமடைந்தது வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மூட்டைகளை அப்படியே கிடங்கில் வைத்தால், அவற்றின் தரம் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்திய உணவு கழக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியதாவது
நேற்று இரவு பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் திருவண்ணாமலைக்கு வந்தன அதனை எப்போது லாரிகள் மூலம் குடோனுக்கு எடுத்துச் செல்வோம் இன்றைக்கு திடீரென வழக்கமாக வரும் லாரிகள் அனைத்தும் வெளியில் சென்றதால் நாங்கள் ஆட்கள் மூலம் கோதுமையை கீழே போட்டு வைத்தோம் எதிர் பாராத விதமாக திடீரென இரவு மழை வந்துவிட்டது .
கோதுமை மூட்டைகளுக்கு நாங்கள் தார்பாய் போட்டு மூடிய நிலையில் தான் இருந்தது. மேலும் காற்று அதிக அளவில் வீசியதால் கோதுமைகள் சிறிதளவு நனைந்துவிட்டது. அதன்பிறகு நாங்கள் மதியம் 12 மணிக்கு பிறகு 25 லாரிகள் மூலம் கோதுமை மூட்டைகள் அங்கிருந்து இந்திய உணவு பொருள் பாதுகாப்பு கிடங்குகளுக்கு ஏற்றிச் செல்லப்பட்டன என்றனர்.