திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - கொள்ளையர்கள் 2 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல்

கொள்ளையர்கள் 2 பேரை திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Continues below advertisement

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் 2 பேரை ஏழு நாள் போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதில் இருந்த ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600-ஐ கொள்ளையடித்து சென்றனர். திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அரியானா மாநிலத்திற்கு விரைந்து சென்று கொள்ளை கும்பல் தலைவன் அரியானா மாநிலம் நூ மாவட்டம் சோனாரி கிராமத்தை சேர்ந்த முகமதுஆரிப் (வயது 35) மற்றும் அரியானா மாநிலம் புன்ஹானா மாவட்டம் பைமாகேரா கிராமத்தை சேர்ந்த ஆஜாத் (37) ஆகிய 2 பேரை கைது செய்தனர். காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 18-ந் தேதி அவர்களை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இதற்காக இன்று திருவண்ணாமலை நீதிமன்றத்தில் திருவண்ணாமலை நகர போலீசார் சார்பில் 2 பேரையும் 10 நாட்கள் காவலில் எடுக்க மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இன்று முகமது ஆரிப் , ஆஜாத் ஆகிய கொள்ளையர்களை 1ல் நீதியரசர் கவியரசன் முன்னிலையில் ஆஜர் படுத்தி ஆகிய இருவரையும் 7 நாட்கள் காவல்துறையினர் காவலில் எடுத்துள்ளனர்.

Continues below advertisement