திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி அதிகாலை நான்கு ஏடிஎம்களில் மேவாத் கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மூலம் வெட்டி எடுத்து கொள்ளையடிக்கப்பட்ட விவாகரத்தில் மூளையாக செயல்பட்ட முகமது ஹரிப், ஆசாத் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கில் குர்திஷ் பாஷா, அஷ்ரப் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கர்நாடக மாநிலம் கோலார் பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.