திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் வளாகத்தில் உள்ள உள்துறை அலுவலகத்தில் வருகின்ற 01.08.2023 (செவ்வாய் கிழமை) மற்றும் 02.08.2023 (புதன் கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ள பௌர்ணமியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் பேசுகையில்,  “திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வருகின்ற பௌர்ணமி தினத்தன்று வெளிநாடுகளிருந்தும், வெளிமாநிலங்கலிருந்தும், அனைத்து மாவட்டங்களிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளார்கள். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், 01.08.2023 (செவ்வாய் கிழமை) மற்றும் 02.08.2023 (புதன் கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ள பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அனைத்து துறை அலுவர்களும் முனைப்புடன் பணியாற்ற வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் கூடுதலாக ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல் தனியார் பேருந்து உரிமையாளர்களை அழைத்து பொதுமக்கள் பக்தர்களின் வசதிகாக இந்த முறை கூடுதலாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


 





ஏற்கனவே பௌர்ணமி அன்று வருகை தந்த பக்தர்களை விட இந்த பௌர்ணமிக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்கப்படுகிறது. எனவே இந்த முறை முதல்நிலை அலுவலர்களுக்கு ஒதுக்கபடும் பணிகளை தோய்வின்றி சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும். பௌர்ணமி தினத்தன்று 01.08.2023 (செவ்வாய் கிழமை) காலை 5 மணிக்கு நடை திறக்ப்பட்டு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும். பௌர்ணமி தினத்தன்று சாமி தரிசனம் செய்ய வரும் அனைத்து பக்தர்களுக்கு இலவசமாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வசதி, கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் மற்றும் குப்பைகளை அகற்றுதல், நகரத்தை தூய்மையாக வைத்திருக்க அதிகமான தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். வருவாய் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை மூலமாக ஆக்கிரமிப்பு கடைகள் அமைப்பவர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலமாக தடையில்லாத மின்சாரம் வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு பாதுகாப்பு துறை மூலமாக அன்னதானம் வழங்க ஆன்லைன் மூலமாக பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும்.


 




மேலும், ஏற்கனவே அன்னதானம் வழங்கிய இடங்களில் மட்டும் அன்னதானம் வழங்க அனுமதி அளிக்க வேண்டும். சுகாதார துறை மூலம் அதிக மருத்துவ முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கனவே கிரிவலப்பாதையை சுற்றி உள்ள 14 கி.மீ. தூரத்தை தூய்மையாக வைத்திருக்க 1 கி.மீ. தூரத்திற்கு ஒரு குழு என்ற அடிப்படையில் அனைத்துறை துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து குழு அமைக்கபட்டு கண்காணிக்கப்பட வேண்டும். நெடுஞ்சாலை துறை மூலமாக பொதுமக்கள் மற்றும் பக்கதர்களுக்கு இடையுறு இல்லாமல் சாலையோர கடைகள் அமைப்பதற்காக துறை மூலமாக குறியீடு அடையாளம் அமைக்கப்பட்ட இடத்தில் மட்டுமே கடைகளை வைக்க அனுமதிக்க வேண்டும். மேலும், ஊரக வளர்ச்சி துறை மூலமாக காவல் துறை பாதுகாப்பு பணி மேற்கொள்ள உயர்மட்ட கோபுரம் அமைத்து தா வேண்டும், காவல்துறை மூலம் 14 கி.மீ. கிரிவலப்பாதையை சுற்றி சாலையின் முக்கிய பகுதிகள் மற்றும் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் வளாகத்தை சுற்றி உள்ள அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்” என்றார்.


தொடர்ந்து ஆட்சியர் பேசுகையில், கோயில் நிர்வாக அலுவலர்கள், தன்னார்வலர்கள் அனைவரும் அனுமதி அடையாள அட்டை அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு கூட்டத்தில் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியர்ஷினி, இந்து சமயம் அநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், இணை ஆணையர்/செயல் அலுவலர் அண்ணாமலையார் திருக்கோயில் இணை ஆணையர் ஜோதி துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.