திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் ராமன் (44) விவசாயம் செய்து வருகிறார் இவருடைய மனைவி பச்சையம்மாள் (40) இவர்களுக்கு கோமதி (21) என்ற மகள் உள்ளார். ராமனின்  தாய், தந்தை விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அடுத்த, மானந்தல் கிராமத்தில் வசித்து வரும் நிலையில் சில மாதங்களுக்கு முன் தனது தந்தை கணேசன் மானந்தல் கிராமத்தில் இறந்துவிட்டதால் ராமன் தனது குடும்பத்துடன் அங்கு சென்றுள்ளார். 




அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சிறுநாத்தூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு  உள்ளதாக ராமனுடைய மைத்துனர் தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் விரைந்து வீட்டிற்கு வந்து பார்த்த ராமன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்படத்தை கண்டு  அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் பீரோவின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில்  இருந்த இரண்டு சவரன் செயின் மற்றும் அரை சவரன் மோதிரம், ஒரு கால் சவரன் மோதிரம், ஒரு கால் காசு என மொத்தம் 3 சவரன் தங்க நகையும், இரண்டு லட்சம் ரொக்க பணமும் மரம் கொள்ளை போனது தெரியவந்தது. 


இந்த கொள்ளை சம்பவம் குறித்து கீழ்பெண்ணாத்தூர் காவல்துறையினருக்கு ராமன் புகார் அளித்துள்ளார்.  கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழ்பெண்ணாத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு கீழ்பெண்ணாத்தூர் காவல் ஆய்வாளர் லட்சுமிபதி, திருட்டு போன வீட்டின் உரிமையாளர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டார். ராமனின் மருமகனான சென்னையை சேர்ந்த விஜயகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது தனது மாமனார் ராமன் வீட்டில் நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார்.



மேலும் அவர் சென்னையில் இருந்த போது விஜயகுமார் திருட்டு மற்றும் கஞ்சா விற்பனை செய்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்து இருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்து. அவரிடமிருந்து திருடுபோன 3 சவரன் தங்க நகைகள் மற்றும் இரண்டு லட்சம் ரொக்கப் பணம் மற்றும் இரண்டு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விஜயகுமாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சொந்த மாமனார் வீட்டிலேயே மருமகன் நகைகளை திருடியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.