தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வுசெய்து மற்றும் குறைகள் குறித்தும் பணிகளை  கேட்டு அறிந்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில்  இன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோவில்களின் வளர்ச்சிப்பணிகள், சாலை மேம்பாடு, கோவில் கிரிவலப்பாதை, கார்த்திகை தீப திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக சட்டமன்ற துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை,  சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் மின்வாரியத் துறை நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைகள் கேட்கப்பட்டது அதில் ஒருவர் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சென்ற வருடம் கொரோனா தொற்றால் தேர்கள் எதுவும் இழுக்கப்படவில்லை, இந்த வருடம் கோவிலின் பெரிய தேர்கள் இழுக்கவேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். அதனைத்தொடர்ந்து கூட்டத்திற்கு இந்த நிகழ்வில் தலைமை ஏற்று  பேசிய மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் உள்ளேயே காலை மற்றும் இரவு வேளைகளில் சாமி ஊர்வலம் நடைபெறும். மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவிக்க வேண்டும் என்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளவேணடும் என்ற கோரிக்கை முன்வைத்தார்



 


பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ.வேலு பேசுகையில்;


அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு யானை இல்லாமல் உள்ளது. உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்,  அதே போன்று அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் கட்டப்பட்ட கடைகளுக்கு கடை வாடகை குறைக்க வேண்டும் ,அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு சில வருடங்களுக்கு முன்பு இருந்த கட்டிடங்கள் தீயினால் கருகி சேதம் அடைந்து தற்போது காலியாக உள்ளது அந்த இடங்களில்  புதியதாக கட்டிடங்கள் கட்டி கடைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடவசதி செய்தி  வேண்டும் என்றும், ஐயன்குளத்தை தூர்வார வேண்டும் என்றும், பழனி என்றால்  பஞ்சாமிர்தம் , திருப்பதி என்றால் லட்டும் இலவசமாக வழங்குவது போல  அதேபோன்று அருணாச்சலேஷ்வரர் கோவிலில் புளியோதரை சாதம் அல்லது கற்கண்டு சாதம் ஏதாவது ஒன்றை இலவசமாக வழங்க வேண்டும் என்றும், பெருமாள் கோவில்களில் ஒலிபெருக்கியின் மூலம் சுப்ரபாதம் நாமம் பாடுவதைப் போல  அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என ஒலிபெருக்கியின் மூலம் முழங்க வேண்டும் என்றும், கோவில் உள்ளே வந்து செல்லும் பக்தர்கள் தங்களுடைய இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலை உள்ளது, அதனை கருத்தில் கொண்டு கோவில் வளாகத்தில் கழிவறை கட்டித்தர வேண்டும்.  


மற்றும்   அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையார் புகைப்படம்  பொரித்த காலண்டர் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கிட  வேண்டியும், திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக  பவுர்ணமி அன்று கிரிவலம் செல்வதற்காக வரும் பக்தர்கள்  பருவதமலைக்கு செல்கின்றனர். அங்கு  சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பக்தர்கள் வருகின்றனர் அதனால்  பருவத மலை கோவிலுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர  வேண்டியும், அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டத்தில்  இந்து சமய அறநிலைத்துறை சார்பில்   கலைக்கல்லூரி ஒன்று அமைய உள்ளது  அந்த கலைக்கல்லூரியில் சிற்பக் கல்லூரி,அர்ச்சகர்  மற்றும் ஓதுவார்,   சிற்பக்கலை போன்ற  வகுப்பு  இடம் பெற வேண்டும் என்றும் அதனை பல்கலைக்கழகமாக உருவாக்க வேண்டும் என்றும்   போன்ற  கோரிக்கைகளை முன்வைத்தனர். 



 


அதன் பிறகு பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியபோது ;


தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில்  உள்ள கோவில்களுக்கு 84 கோடி ரூபாய் பணிகள் செய்ய உத்தரவு இடப்பட்டுள்ளது. அதிலிருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கோவில் பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர்  கூறிய அனைத்து கோரிக்கைகளையும்  காலதாமதமின்றி அனைத்தையும் நிறைவேற்றி தரப்படும் என்றும் உறுதியளித்தாரர் அதனைத்தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து   விவாதிக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை மற்றும்  முதல்வர் பொது நிவாரண நிதி அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 56 பயனாளிகளுக்கு 55 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.



அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, உலகப் பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் பத்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 19ஆம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் அன்று மாலை 2,668 அடி உயரம் கொண்ட தீபம் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், கொரோனா பெருந்தொற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளிலிருந்து குறைந்து கொண்டு வருவதாகவும், தீபத் திருவிழாவில் பக்தர்கள் அனுமதிப்பது குறித்து அனைத்து சூழ்நிலைகளையும் ஆராய்ந்த பிறகு சூழ்நிலைக்கு ஏற்றவாறு முதல்வரின் அனுமதியைப் பெற்று முடிவெடுக்கப்படும் என்றும், கிரிவலப்பாதையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட குளங்கள் கண்டறியப்பட்டு ஆக்கிரமிப்புகள் விரைவில் அதிரடியாக அகற்றப்படும் என்றும் கூறிய அவர் கிரிவலப்பாதையில் உள்ள மின்கம்பங்கள் காண மின்கட்டணத்தை அறநிலையத்துறை ஏற்கும் என்றும் கூறினார்.