திருவண்ணாமலை ( Tiruvannamalai News) தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டம் விரிவாக்கப்பட்டு கடந்த 25ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக முன்னோட்டத்திற்காக கடந்த 21ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் இனாம்காரியந்தல் ஊராட்சி வெங்காயவேலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஒத்திகைக்காக உணவு தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பாமகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் முருகன் என்பவரும் ஊராட்சித் துணைத் தலைவர் கங்கா குருமூர்த்தி மற்றும் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்களை ஒன்றாக அமரவைத்து காலை உணவுகளை வழங்கி உள்ளனர். இந்நிகழ்ச்சியை இளநிலை ஆசிரியர் ஜோதிலட்சுமி ஏற்பாட்டில் நடைபெற்று உள்ளது.



 


திமுக பிரமுகர் ஆசிரியரை மிரட்டல் 


இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி மாலை திமுக கிளைச் செயலாளர் பன்னீர் இளநிலை ஆசிரியை ஜோதிலட்சுமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோவில் பேசிய பாமகவை அழைத்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பீர்களா, சிஇஓவை பார்த்து மந்திரியிடம் போட்டோவுடன் அனுப்பி உன்னை பார்த்து விடுவேன், நாளை பள்ளி திறந்தால் இப்பகுதியில் உள்ள பசங்களை வைத்து பிரச்சனை செய்வேன், திமுக ஆட்சி நடக்கிறதா? அல்லது பாமக ஆட்சி நடக்கிறதா? பள்ளியில் கட்சி நடத்துகிறீர்களா? பள்ளியில் ஒரு நாள் கூட உங்களால் வேலை பார்க்க முடியாது என மிரட்டல் விடுத்துள்ளார். பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக அரசு கொண்டுவந்துள்ள முன்மாதிரியான காலை உணவுத் திட்டத்தினை செயல்படுத்து வரும் நிலையில் தற்பொழுது இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தி உள்ளது.Moon Temperature: நிலவின் வெப்ப நிலை என்ன? விஞ்ஞான உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இஸ்ரோவின் புது அப்டேட்




 


திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை 


திமுகவினர் அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களும் மிரட்டும் போக்கு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டும் சமூக ஆர்வலர்கள் அவர்களுக்கு உள்ளூர் மந்திரி உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது போன்ற தவறுகள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் திமுக கிளைச் செயலாளர் பன்னீர் மீது தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் துறையினரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எஸ்.ஐ. வேலைக்கான தேர்வில் காப்பி அடித்து சிக்கிய போலீசின் மனைவி..! என்னம்மா இப்டி பண்றீங்களேமா..?