திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு முடிவு தேர்ச்சியில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் 30 வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு 7வது இடத்திலிருந்து தேர்ச்சி சதவீதம் இந்த ஆண்டு 30 ஆவது இடத்தில் தள்ளப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியவர்களின் தேர்ச்சி சதவிகிதம் 88.95 % திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் எண்ணிக்கை 32436, மாணவர்கள் 16637,மாணவிகள் 15799, திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் 28852, மாணவர்கள் 14097, மாணவிகள் 14755, திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவ மாணவிகளின் தேர்ச்சி சதவிகிதம் மாணவர்கள் 84.73%, மாணவிகள் 93.39% சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு சதவிகிதம் தேர்ச்சி குறைவு என தெரிய வருகிறது. 


 




மாவட்ட வாரியாக விவரம் :


இதனிடையே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் (97.67% ), சிவகங்கை (97.53%), விருதுநகர் (96.22%) ஆகிய மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளது. 4வது இடத்தில் கன்னியாகுமரி (95.99%), 5வது இடத்தில் தூத்துக்குடி (95.58%), 6வது இடத்தில் அரியலூர் (95.40%), 7வது இடத்தில் ஈரோடு (94.43%), 8 வது இடத்தில் திருச்சி (94.28%), 9வது இடத்தில் திருநெல்வேலி (94.19%), 10வது இடத்தில் தென்காசி (94.12%) ஆகிய மாவட்டங்கள் முதல் 10 இடத்தில் உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் 83.54 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.  


தேர்வு முடிவு:


தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவ, மாணவிகள் தெரிந்துக் கொள்ளலாம். மேலும் தேர்வர்கள் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கும் முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண