திமுக வடக்கு மண்டல ஓட்டு சாவடி பொறுப்பாளர்கள் பாசறை கூட்டம் திருவண்ணாமலை அடுத்த மலப்பாம் பாடி அருணாச்சலம் நகரில் நாளை 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. கூட்டத்தில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய  வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த 13 செயலாளர்கள் ஓட்டு சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை சிறப்புரை ஆற்றுகிறார். ஆயிரக்கணக்கான கலந்து கொள்ளும் இக்கூட்டத்திற்காக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை திருவண்ணாமலை வருகிறார். இதை ஒட்டி வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு இன்று மாலை மாவட்ட எல்லையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் எழுச்சியான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.


 




தொடர்ந்து சோமாசிபாடி, சோமாசிபாடி புதூர், திண்டிவனம் பைபாஸ் சாலை மேம்பாலம் அருகில், பைபாஸ் சாலையில் உள்ள திருநேர்த்தி அம்மன் கோவில் அருகில் என பல்வேறு வழிநெடுகிலும் லட்சக்கணக்கான தொண்டர்கள்  மூலம் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில் 600 அதிநவீன படுக்கைகள் கொண்ட பல்நோக்கு கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.  பின்னர் ஓட்டுச்சாவடி மண்டல பொறுப்பாளர்கள் பாசறைக் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை திமுக நகரச் செயலாளர்,கார்த்திகேயன் வேல்மாறன் நகராட்சி தலைவர் நிர்மலா வேல்மாறன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். முதல்வர் வருகையை ஒட்டி திருவண்ணாமலையில் பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.