திருவண்ணாமலை கிரிவலப்பாதை செங்கம் சாலை சந்திப்பில் அருளாளர் அருணகிரி நாதர் மணிமண்டம் திறக்கும் நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உரையாற்றினார். அப்போது அருணகிரி நாதரை பற்றி பெருமிதமாக பேசினார். குறிப்பாக வயோதிகரை பற்றி அருணகிரி நாதர் பாடிய சந்தத்தை பற்றி எடுத்துரைத்தார். முனையழிந்தது, மெட்டி குளைந்தது, வயது சென்றது என்ற சந்தத்தை மேற்கோள்காட்டி பேசினார். தான தான தான தான தான தன தானே என்ற சந்தத்தை பயன்படுத்தி அருணகிரி நாதர் ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று, ஈசனுடன் ஞான மொழி பேசுமுகம் ஒன்று என அருணகிரி நாதர் பாடல் அமைத்தார் என்று பேசினார்.
தற்போது உள்ள இசையமைப்பாளர் இளையராஜா இந்த சந்தத்தை பயன்படுத்தி மாங்குயிலே புங்குயிலே சேதி ஒன்று கேலு, உன்ன மாலையிட தேடி வரும் நாளும் எந்த நாளு என பாடலை வடிவமைத்தார் என்று பேசினார். 15ம் ஆண்டு நூற்றாண்டில் திருவண்ணாமலை மண்ணில் பிறந்து சந்தத்தையமைத்து அந்த சந்தத்தை பயன்படுத்தி பல இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளனர் என்றால் அதற்கு அருணகிரி நாதர் தான் காரணம் என்றும், மேலும் திருப்புகழை பாரதியார் பயன்படுத்தி பல்வேறு பாடல்களை பாடியுள்ளானர் எனவும்,கானி நிலம் வேண்டும் பராசக்தி, கானி நிலம் வேண்டும் என்று பாரதியார் பாடியுள்ளார் எனவும், இதுமட்டுமின்றி கவிஞர் கண்ணதாசனும் அருணகிரி நாதர் சந்தத்தை பயன்படுத்தி பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார் என்றும், வாராயோ தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ என்ற பாடல் எழுதப்பட்டது எனவும், இந்த பாடல் தற்போது அனைத்து கிராமங்களிலும் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் சட்டப்பேரவையில் அதிமுகவை சேர்ந்த அமைச்சர் பொன்னையில் சமயகுரல்கள் 3 நபர்கள் என்று தெரிவித்தார் என்றும், அதற்கு தான் குறுக்கிட்டு சமயகுரல்கள் 3 நபர்கள் இல்லை 4 பேர் என்று தெரிவித்தததாகவும், அப்பர், சுந்தரர், திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர் என்று தான் சொன்னதாகவும், 63 நாயன்மார்கள் சைவத்தை பரப்பினர் எனவும், 12 ஆழ்வார்கள் வைணவத்தை பரப்பினர் என்றும், 63 நாயன்மார்களில் முக்கியமானவர் இந்த 4 நபர்கள் தான் என்றும், 5 குறிப்பாக 5ம் நூற்றாண்டிற்கு பிறகு தான் வந்தது என்றும், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மையார் வேலு சொல்வது தான் சரி நீங்கள் அமைதியாக உட்காருங்கள் என்று கூறியதாக தெரிவித்தார்.