ராணிப்பேட்டையில் தனியார் பள்ளி பேருந்து திடீரென தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


ராணிப்பேட்டை மாவட்டம்.


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதி நகர் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் அரக்கோணத்தை அடுத்த சேர்ந்தமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற மாணவர்கள் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் பள்ளிக்கு வருவது வழக்கம். 


உயிர் தப்பிய 4 மாணவர்கள்:


அதேபோல் இன்று காலை 6:00 மணி அளவில் பள்ளி பேருந்தில்  மாணவர்கள் நான்கு பேரை ஏற்றிக்கொண்டு வந்த நிலையில் சேந்தமங்கலம் ரயில்வே கேட் அருகில் பேருந்தின்  முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.இதை கவனித்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தில் இருந்த நான்கு மாணவர்களை கீழே இறக்கினார் . அவரும் உயிர் தப்பினார். 







கொழுந்து விட்டு எரிந்து பேருந்து:


இது குறித்து அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தீயணைப்பு வீரர்கள் விரைந்து வராத நிலையில் அரை மணி நேரமாகியும் பள்ளி பேருந்து தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Also Read: உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.! 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது மழை! விவரம்!


Also Read: மின்சாரம் தாக்கி பலியான தாய் பசு! தினம்தோறும் அம்மாவை எதிர்பார்த்து காத்திருக்கும் கன்று!