தற்போது தமிழகத்தில் பண்டைய காலமக்களின் நாகரிகம் மற்றும் வாழ்ந்த நடைமுறைகளை பற்றி தெரிந்துகொள்ள அரசாங்கம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் பரவலாக கண்டறியப்படும் தொன்மைவாய்ந்த வரலாற்றுக் குறிப்புகளும், சின்னங்களும்  தகவல்களை வெளிப்படுத்தி வருகின்றன. அதில் தொன்மைவாய்ந்த வரலாற்று நடுகற்கள் வழிபாடும் முக்கியமான ஒன்றாகும் தமிழர்களின் வரலாற்றில், உருவச்சிலை வழிபாடுகளுக்கு முன்பாக நடுகல் வழிபாடு இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 


வரலாற்றைப் தெரிந்து கொள்ளும் நடுகற்களின் வழிபாடுகள் தற்போது பெரும்பாலும் மறைந்து கொண்டே வருகின்றது . மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் பல்வேறு பகுதிகளில்  நடுகற்கள் மற்றும் மரபு சிலைகள் தற்போது அழியும் விளிம்பில் உள்ளது. கல்வெட்டுகளை பாதுகாக்கப்பட வேண்டும் . இதை உணர்ந்த திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் குழுவினர், சேதமடைந்த நடுகற்களை மீட்டுப் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 



இதைப்பற்றி தாசில்தாரிடம் பேசுகையில், ”திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் பகுதியில் பல ஆண்டுகள் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு காலத்திலிருந்து 11வது நூற்றாண்டு வரை நடுகற்கள் கிடைத்துள்ளன. முன்னோர் காலத்து பெண் தாய் தெய்வ சிலை  இதுபோன்ற நடுகற்கள் வழிபாட்டில் இல்லாமல் இருக்கின்றன. சில பகுதிகளில் உடைந்து நிலையிலூம் கிடைத்துள்ளன. வரலாற்றைத் தாங்கி பிடிக்கும் நடுகற்கல் காக்கப்பட வேண்டும் என முடிவு செய்து .   


தமிழக அரசிடம் உதவி கேட்டுக் காலம் தாழ்த்துவதைத் தவிர்க்கக் களத்தில் இறங்கலாம் என முடிவு செய்து. சீரமைக்கும் செய்ய வேண்டிய நடுகற்கள் இருக்கும் பகுதிகளை சேர்ந்தவர்களின் உதவியோடு இந்தப் பணியை மேற்கொள்ளப்பட்டது. அதில் எடத்தனூர், ராதாபுரம், தண்டராம்பட்டு, கீழ் ராவந்தவாடி, தேசூர், வீரணம், செ.கூடலூர் உள்ள கிராமங்களில் உடைந்த நிலையில் இருந்த நடுகற்களை மீட்டு புனரமைத்துள்ளோம். 



இந்த மாதம் சென்ற மாதம் தான் வீராணம் பகுதியிலும், சே.கூடலூர் பகுதியிலும் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நடுகற்களை சிமெண்ட் கொண்டு இணைத்து சரிப்படுத்தினோம் , அந்த நடுகற்களை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் பலராலும் அதில் உள்ள எழுத்துக்களைப் புரிந்துக்கொண்டு  படிக்க இயலாது . எனவே, அவர்கள் எளிதாக படிக்க கியூ ஆர் கோட் (QR code) பயன்படுத்தத்  தொடங்கியுள்ளோம். நடுகற்களை புனரமைத்ததும் அதன் அருகே தற்போது பதாகைகளும் வைத்து வருகிறோம்.


அந்தப் பதாகையின் இறுதியில் கியூ ஆர் கோட் ஒன்று இருக்கும். அதை 'யாதும் ஊரே' வலைப்பக்கத்துடன் இணைத்துள்ளோம். நடுகல்லில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் அந்த ஊரின் அமைவிடம், வரலாறு ஆகியவற்றை அந்த வலைப்பக்கத்தில் பதிவேற்றம்  செய்து விடுவோம்.அங்கு வரும் நபர்கள் அந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் போதும் முழுமையான தகவல்களை எளிதில் அறிந்து கொள்ளலாம்  இது போன்று பல பகுதிகளில் சிதைந்த கல்வெட்டுகளை கண்டுபிடித்துள்ளோம் அவற்றையும் சீக்கிரம் புனரமைப்போம் எனக்கூறினார்.