ஆடி அமாவாசை போன்று மஹாளய அமாவாசை அன்று பித்ருக்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும் என்பது  ஐதீகம் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் மகாளய அமாவாசையை அன்று புண்ணியஸ்தலங்களிலும், கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளிலும் தர்ப்பணம் செய்ய மக்கள் கூடுவது வழக்கம். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்தாண்டை போலவே இந்தாண்டும் நீர்நிலைகளில் பொதுமக்கள் கூட்டமாக கூடி தர்பணம் செய்ய தமிழக அரசு தடை விதித்து இருக்கிறது.


கிருஷ்ணகிரியில் கள்ளக்காதலன் அடித்து கொலை - கணவன் உட்பட 3 பேர் நீதிமன்றத்தில் சரண்




அந்த வகையில் இன்று மஹாளய அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கானவர்கள் திருவண்ணாமலையில் உள்ள ஐய்யங்குளக்கரையில்  தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் தாக்கம் சிறிது கட்டுக்குள் இருந்தாலும்,  திருவண்ணாமலை மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுவேரின் எண்ணிக்கை தற்போது குறைந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா 3 ஆவது அலை உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில். இதன் காரணமாக தமிழகத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கொரோனா பரவலை பொறுத்து  கட்டுபாடுகளை விதிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த சூழலில் புரட்டாசி மஹாளய அமாவாசை முன்னிட்டு ஆண்டுதோறும் திருவண்ணாமலை மட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்தவர்கள், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர், திருவண்ணாமலை ஐயங்குளம், கிரிவலப்பாதையில் உள்ள ரமணா ஆசிரமம் பகுதியில் உள்ள  குளத்திலும்,  500க்கும் மேற்பட்டோர் திரண்டு தங்களது முன்னேர்களுக்களுக்கு தர்பணம் கொடுப்பது வாடிக்கை. 



இந்நிலையில் தடை உத்தரவை மீறி பொதுமக்கள் காலை முதல் திருவண்ணாமலையில் மாவட்டத்தில் உள்ள ஐங்குளம், கலசபாக்கம் பாம்பாறு,  தாண்ட்டராம்பட்டு பகுதியில் உள்ள தெண்பெண்ணை ஆறு உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர். காவல் துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாத பொதுமக்கள் ஏராளமானோர் குளம், ஆறு போன்ற இடங்களில்  திரண்டனர். இதனை அடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் முன்னதாக ஐங்குளத்தில்  முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஆயிரக்கணக்கான பொது மக்கள் குளக்கரையில் கூடினர். தடை விதித்த நிலையில் காவல்துறையினர் ஒருவர்கூட இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை.