விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா கப்பலாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் வயது (22) இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருடைய நிறுவனத்தில் விடுமுறை அளித்துள்ளனர். இதனால் இவர் சொந்த கிராமத்திற்கு செல்லாமல் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் அவரது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது, உறவினர் மகளான வயது (14) வயது சிறுமி உள்ளார். இதில் இருவர்களுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமியின் தந்தை மற்றும் தாய்  வெளியே சென்று உள்ளனர்.  அப்போது விக்னேஷ் வழக்கம்போல் சிறுமியை கேரம் போர்டு விளையாடலாம் எனக் கூறி அழைத்துள்ளார். அப்போது சிறுமியை  தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து தனியாக சென்ற இடத்தில் சிறுமியிடம் வன்கொடுமையில் ஈடுபட முயற்சித்துள்ளார்.



அப்போது சிறுமி என்னிடம் தவறாக நடந்துக்கொள்ள வேண்டாம் என அழுது கெஞ்சியுள்ளார். அதையும்  மீறி விக்னேஷ் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் சிறுமியிடம் விக்னேஷ்  இந்த சம்பவத்தை நீ வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், அச்சம் அடைந்த சிறுமி, நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக ஆக்கிக்கொட்ட விக்னேஷ் மீண்டும் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டுள்ளார். பின்னர் சிறுமி இது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவில்லையாம். 


இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென அந்த சிறுமி வீட்டில் வாந்தி எடுத்துள்ளார் அதன் பிறகு சிறுமி வயிறு வகிக்கின்றது என பெற்றோரிடம் கூறியுள்ளார்.  இதனால் உடனடியாக சிறுமியை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள்  நடத்திய பரிசோதனையில் அந்த சிறுமி 2மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை கேட்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்கள்.



இதனைத்தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சைல்டு ஹெல்ப்லைனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மருத்துவமனைக்கு விரைந்து வந்த சைல்டு ஹெல்ப்லைன் அதிகாரிகள் திருவண்ணாமலை மகளிர் காவல்துறையினரிடம் தகவல் அளித்துள்ளனர் அதன் அடிப்படையில் காவல்துறையினர்  விசாரணை நடத்தினர். அதன் பிறகு, சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


அரசு நிலத்தை தனியாருக்கு பட்டா..தட்டி கேட்ட ஆட்சியர் | Fake Document Issue | Theni | Detailed Report