Crime: கர்ப்பிணி மனைவி கட்டையால் அடித்துக் கொலை..! சடலத்தை காட்டில் வீசிய காதல் கணவன்..! திருமணமான 6 மாதத்திலே சோகம்..!

வேலூரில் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் திருமணம் செய்து கர்ப்பமாக இருந்த மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவனை போலீஸ் கைது செய்தனர்.

Continues below advertisement

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த பாலமதி மலையில் பாறை இடுக்கில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், 27-ம் தேதி காலை பாகாயம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Continues below advertisement

இறந்த பெண் கொலை செய்யப்பட்டு மலையில் இருந்து தள்ளிவிடப்பட்டு இருக்கலாம் என சந்தேகித்த காவல் துறையினர், மோப்பநாய் உதவியுடன் கொலையான பெண் யார்? என்றும் கொலை செய்தது யார்? என்று தேடி வந்தனர். மேலும் பெண்ணிண் உடலில் இருந்த கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். பாலமதி மலை அதனை சுற்றியுள்ள பகுதிகள் பாலமதி மலையடிவாரம், ஓட்டேரி பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

 


 

அப்போது கண்காணிப்பு கேமராக்களில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணை இருசக்கர வாகனத்தில்  வாலிபர் ஒருவர் பாலமதி மலைக்கு அழைத்து செல்வதும், பின்னர் வாலிபர் மட்டும் இருசக்கர வாகனத்தில் திரும்பும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்த வாலிபர் குறித்து நடத்திய விசாரணையில் வேலூர் தொரப்பாடியை சேர்ந்த துணை ஆய்வாளர் ஒருவரின் மகன் கார்த்தி வயது {22) என்பதும், அவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குள்ளச்சாவடியை சேர்ந்த குணப்பிரியாவை வயது (22) இன்ஸ்டாகிராம் மூலம் காதல் திருமணம் செய்து குடும்பம் நடத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் கார்த்தியை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், கார்த்தி தனது காதல் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.


 

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில்; "குணப்பிரியா சென்னையில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, அவருக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் கார்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதும் ஏ.சி.மெக்கானிக் வேலை செய்து வந்த கார்த்தி நாளடைவில் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊதாரித்தனமாக ஊர் சுற்றி திரிந்தால் அவருடைய தந்தை துணை ஆய்வாளர்  வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டதாகவும். மேலும்  கார்த்தி தனது காதல் குறித்து வீட்டில் தெரிவித்துள்ளர். ஆனால் பெற்றோர்கள் ஏற்க மறுத்துள்ளனர். அதனால், கார்த்தி கடந்தாண்டு குணப்பிரியாவை காட்பாடி அடுத்த வள்ளிமலை முருகன் கோயில் மலையடிவாரத்தில் வைத்து நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார். 

 


காதல் திருமணம் செய்த கார்த்தியை  வீட்டில் பெற்றோர்கள் சேர்க்காததால் வேலூர் விருப்பாட்சிபுரத்தில் உள்ள நண்பர் வீட்டில் 2-மாதம் தங்கி உள்ளனர். அவ்வப்போது கார்த்தி மேளம் அடிக்கும் வேலைக்கு சென்றுள்ளார். இதற்கிடையே குணப்பிரியா 5-மாத கர்ப்பமாகியுள்ளார். கார்த்தியிடம்  தனது பெற்றோரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து செல்லக்கோரி குணப்பிரியா அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

இதனால்  கடந்த சில நாட்களுக்கு முன்பு குணப்பிரியா சிதம்பரத்தில் உள்ள சித்தி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சில நாட்கள் இருந்து விட்டு அவர் கடந்த 26-ம் தேதி இரவு 10 மணியளவில் வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு  வந்துள்ளார். கார்த்தி இருசக்கர வாகனத்தில் ஏற்கனவே தங்கியிருக்கும் நண்பர் வீட்டிற்கு அழைத்து செல்ல முயன்றுள்ளார். அப்போது குணப்பிரியா அங்கு செல்ல விரும்பாததால் பாலமதி மலையில் உள்ள கோயிலில் ஒரு நாள் இரவு மட்டும் தங்கிவிட்டு காலையில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறலாம் என்று அழைத்து சென்றுள்ளார். 

 


ஆனால், வாடகை வீட்டில் குடியேறுவது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த கார்த்தி அங்கு கிடந்த கட்டையால் குணப்பிரியா தலையில் அடித்துள்ளார். அதில், அவர் மயங்கி சரிந்து கீழே விழுந்துள்ளார். அதன்பின்னரும் ஆத்திரம் அடங்காத கார்த்தி உடைந்த மதுபாட்டிலை அவரின் கழுத்தில் குத்தி உள்ளார். இதில் அவர் இறந்துபோனார். அதையடுத்து மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார். இவ்வாறு போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தனர்." மேலும் இருவரும் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் பாலமதி மலைக்கு சென்றதாகவும், ஆங்கு மனம் மாறிய கார்த்தி குணப்பிரியாவை சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.

ஆனால் குணப்பிரியா ஒப்புக்கொள்ளாததால் அவரை கொலை செய்துள்ளார் கார்த்தி. இதையடுத்து போலீசார் கார்த்தியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement