கடந்த 2 வாரங்களுக்கு மேலாக ஏலகிரி மலையிலிருக்கும் இரண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின்
  ஏடிஎம் இயந்திரங்கள் பணமின்றி  காணப்படுவதால் , ஏலகிரிக்கு உட்பட்ட 14 மலைக் கிராம மக்கள், அரசு ஊழியர்கள்  மற்றும் சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதி அடைந்துள்ளனர் .

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலையில் அமைத்துள்ளது ஜோலார்பேட்டை . இதன் அடிவாரத்திலிருந்து சுமார் 21 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது ஏலகிரி மலை , இது தமிழ் நாட்டின்  ஒரு பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது .

 

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1 .7 லட்சம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஏலகிரி , 4 மலைகளால் சூழப்பட்டு இயற்கை எழில்மிகு ரம்மியமான  சூழ்நிலையில் அமைத்துள்ளது . ஏலகிரி சுற்றுலாத்தலத்தின் மொத்த பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர் .

 



 

இங்கு ட்ரெக்கிங் , பாரா க்ளைடிங் , மவுண்டென் பைக்கிங் உள்ளிட்ட சாகச விளையாட்டுகளும் , படகு இல்லம் , சிறுவர் பூங்கா புகழ்பெற்ற முருகன் கோவில் , ஜலகம்பாறை அருவி உள்ளிட்ட பல சுற்றுலா தளங்கள் உள்ளன . சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் கோடைக் காலத்தை குடும்பத்தினருடன் செலவழிக்க ஏலகிரி சுற்றுலா தளம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் ஒரு பட்ஜெட் பிரெண்ட்லி சுற்றுலாத் தலமாக அமைந்திருப்பது தான் இதன் சிறப்பம்சம் .

 

தமிழ் நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாகச் சுற்றுலாத் தலங்கள்  மூடப்பட்டிருந்த நிலையில் , தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்த சில தளர்வுகள் காரணமாகக் கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் ஏலகிரி சுற்றுலா தளமும் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

 

மேலும் ஏலகிரி மலை 14  மலைக்கிராமங்களை உள்ளடக்கிய  தனி ஊராட்சியாகச் செயல்பட்டு வருகின்றது .  தமிழ் நாட்டின் ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக அமைத்திருப்பாதல் , வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள் தோறும் வந்து செல்கின்றனர் . 

 



 

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இங்குள்ள மலை வாழ் மக்கள் மற்றும் வணிகர்கள் பல்வேறு வியாபாரங்கள் , பொழுதுபோக்கு கூடங்கள் , தங்கும் விடுதிகள் , உணவகங்கள் , ரெசார்ட்கள் உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றனர் . 

 

இதனால் ஏலகிரி மலையில் பல்வேறு தொழில் காரணங்களுக்காகவும் , பொதுமக்கள் , வியாபாரிகள் பயன்பாட்டிற்காகவும் அத்தனாவூர் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட இரண்டு வங்கிகள் செயல்பட்டு வருகின்றது .

 

மேலும் இரு வங்கிகளின் மூலமாக மக்கள் பயன்பாட்டிற்காக 2 ஏடிஎம் இயந்திரங்கள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளது . இந்த ஏடிஎம் மையங்கள் வழியாக ஏலகிரி மலைப்பகுதியில் பணிபுரியும் பல்வேறு துறைகளின் அரசு ஊழியர்கள் , வியாபாரிகள் , பொது மக்கள் , சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள ஏடிஎம் மையங்களைப் பயன்படுத்தி அவசர தேவைகளுக்குப் பணம் பரிமாற்றம் செய்து வந்தனர் .

 



 

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக இங்குள்ள இரண்டு ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பப்படாமல்  உள்ளது . இதனால் பெரிதும் பாதிப்படைந்த மலைவாழ் மக்கள் , அரசு ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இது குறித்து பலமுறை சம்மந்தப்பட்ட வாங்கி அதிகாரிகளுக்குப் புகார் தெரிவித்தும் , கண்டும் காணாமல் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .

 

இது தொடர்பாக ஏலகிரி மலைப் பகுதியைச் சேர்ந்த வணிகர் ஒருவர் ABP நாடு செய்தி குழுமத்திடம் தெரிவிக்கையில் , ‛ஏலகிரி மலையில் 14 கிராமங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் அதிகமான மலைக் கிராம மக்கள் வசித்து வருகின்றனர் , 4 மாத ஊரடங்குக்குப் பின்னர் தற்போது மீண்டும் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , நாள் ஒன்றுக்குக் குறைந்த பட்சம் 100 சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர் , வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது .  கடந்த இரண்டு வாரங்களாக  ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லாமல் காணப்படுகின்றது . இதுதொடர்பாக பலமுறை வங்கி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும் தொடர்ந்து அவர்கள் அலட்சியப்போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர் . ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லாத சூழ்நிலை பல முறை நிகழ்ந்துள்ளதால் அலட்சியப் போக்கில் செயல்பட்டுவரும்  வங்கி அதிகாரிகள் மேல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார் .

 



 

இது தொடர்பாக வாங்கி அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்ட பொது , பொது மக்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்களை அவர் முற்றிலுமாக மறுத்தார் . மேலும் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்புவதற்குத் தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் இருப்பதால் அவர்கள் தான் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் . அவர்கள் மேற்கொள்ளும் தாமதத்தால் தான் பொது மக்கள் அவதி அடைவதாகவும் , விரைவில் இதற்குத் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார் .

Car loan Information:

Calculate Car Loan EMI