தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல், அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி நடைபெறுகிறது. நகர்புற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தற்போது நடைப்பெற்று வருகின்றது. எனவே, தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. அரசியல் கட்சியினரும் தேர்தல் களத்தில் வாக்கு சேகரிக்க தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்  தொடங்கியது. அதையொட்டி திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய நகராட்சி அலுவலகங்களில் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்புமனுக்களை பெறபட்டு வருகிறனர்.



அதனை தொடர்ந்து செங்கம், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், போளூர், கண்ணமங்கலம், களம்பூர், சேத்துப்பட்டு, பெரணமல்லூர், தேசூர் ஆகிய பேரூராட்சி அலுவலகங்களில் வேட்புமனுத் தாக்கல் நடைப்பெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தைப் பொருத்தவரை  4 நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளை கொண்டது. இவற்றில் திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளது. இதில் 144 வாக்கு சாவடிகளும் ஆண், பெண் வாக்காளர்கள் 142135 நபர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கவும், விதிமீறல்களை தடுக்கவும் 42 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்,காவல்துறையினர் என பறக்கும் படை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நகராட்சிக்கும், பேரூராட்சிக்கும் தலா 3 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 8 மணி நேரம் சுழற்சி முறையில் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


Seats For Transgenders: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திருநங்கைகளை களத்தில் இறக்கும் முக்கிய அரசியல் கட்சிகள்...!


 




இந்த நிலையில் வந்தவாசி நகர எல்லைப் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அப்போது காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த வேர்கடலை பர்பி வியாபாரி சீனிவாசன் என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 50 ஆயிரம்  ரூபாய் பணம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து வந்தவாசி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் முஸ்தபாவிடம் ஒப்படைத்தனர்.


பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு லஞ்சம் பெற்றால் கடும் நடவடிக்கை - திருவண்ணாமலை ஆட்சியர் எச்சரிக்கை