இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை  தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. கேரளா மாநிலத்தை தவிர இந்தியாவின் பிற மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பு இறங்கு முகத்திலேயே இருந்து வருகிறது .


அதன்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்  (வேலூர் , திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில்) புதிதாக 79 நபர்களுக்கு கொரோனா தோற்று உறுதி . திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர்  கொரோனா நோய் சிகிச்சை பலனளிக்காமல் இன்று இறந்துள்ளார் .


வேலூர்  மாவட்டத்தில், இன்று மட்டும் 33  நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47955 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 36 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 46,489 ஆக அதிகரித்துள்ளது. இன்று வேலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று மரங்கள் எதுவும் பதிவுசெய்யப்படாத நிலையில் ,  கொரோனா நோய்த்தொற்றால் வேலூர் மாவட்டத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1094 ஆகவே உள்ளது .
இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில்  372  நபர்கள் கொரோனா பாதிப்பிற்காக வேலூர் மாவட்டத்திலுள்ள 9  க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .


இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் , இன்று மட்டும் 23  நபர்களுக்கு கொரோனா நோய்  பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 41886  ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 31 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 40824 ஆக அதிகரித்துள்ளது. இன்று ராணிப்பேட்டை மாவட்டத்திலும் புதியதாக உயிரிழப்புகள் ஏதும் பதிவாகாத நிலையில்  கொரோனா நோய் தொற்றுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 739 ஆகவே உள்ளது  .


இதன்மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில்  323   நபர்கள் கொரோனா பாதிப்பிற்காக ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 10 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .


ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் மற்றொரு அங்கமான திருப்பத்தூர் மாவட்டத்தில் , இன்று  23  நபர்களுக்கு கொரோனா நோய்  பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28174  ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 27 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 27271 ஆக அதிகரித்துள்ளது. 




இன்று திருப்பத்தூர்  மாவட்டத்தில் ஒருவர்  கொரோனா நோய்த்தருக்கு பலியாகி உள்ளதால் , கொரோனா நோய் தொற்றுக்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது  . இதன்மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில்  323   நபர்கள் கொரோனா பாதிப்பிற்காக திருப்பத்தூர்  மாவட்டத்திலுள்ள 11 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .


கொரோனா பரிசோதனைகள் பொருத்தவரையில் கடந்த 24 மணிநேரத்தில் வேலூர் மாவட்டத்தில் 3148 நபர்களுக்கும் , திருப்பத்தூர் மாவட்டத்தில் 1583 நபர்களுக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1615  நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு , இதில் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோர்களில் 1 .0 % நபர்களுக்கும் , திருப்பத்தூர் மாவட்டத்தில்  1 .6 % நபர்களுக்கும் , ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 .5% நபர்களுக்கும் கொரோனா பாசிட்டிவ் என்ற முடிவுகள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .