தமிழ் நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் , கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது  , அதன்படி  சென்னை , செங்கல்பட்டு , கோவை , ஈரோடு மற்றும் தஞ்சாவூர் , ஆகிய 5 மாவட்டங்களில்   , இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 100 யில் இருந்து 188 வரை தாண்டியுள்ளது .


அதன்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்  (வேலூர் , திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில்) புதிதாக 68 நபர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது  .  ராணிப்பேட்டை  மாவட்டத்தை சேர்ந்த ஒருவர்  கொரோனா நோய் சிகிச்சை பலனளிக்காமல் இன்று இறந்துள்ளார் .





வேலூர்  மாவட்டத்தில், இன்று மட்டும் 30  நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48015 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 31 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 46,559 ஆக அதிகரித்துள்ளது. இன்று வேலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று மரங்கள் எதுவும் பதிவுசெய்யப்படாத நிலையில் ,  கொரோனா நோய்த்தொற்றால் வேலூர் மாவட்டத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1094 ஆகவே உள்ளது .
இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில்  362  நபர்கள் கொரோனா பாதிப்பிற்காக வேலூர் மாவட்டத்திலுள்ள 9  க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .



இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் , இன்று மட்டும் 20  நபர்களுக்கு கொரோனா நோய்  பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 41926  ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 34 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 40895 ஆக அதிகரித்துள்ளது. இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் பாதிப்புக்கு ஒருவர் உயிர் இழந்த நிலையில் கொரோனா நோய் தொற்றுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 740 ஆக உயர்ந்துள்ளது   .



இதன்மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில்  291   நபர்கள் கொரோனா பாதிப்பிற்காக ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 10 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .


 




ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் மற்றொரு அங்கமான திருப்பத்தூர் மாவட்டத்தில் , இன்று  18  நபர்களுக்கு கொரோனா நோய்  பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28213  ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 27 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 27329 ஆக அதிகரித்துள்ளது. 
பலியாகாத நிலையில் திருப்பத்தூர்  மாவட்டத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 600 ஆகவே உள்ளது   . இதன்மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில்  284   நபர்கள் கொரோனா பாதிப்பிற்காக திருப்பத்தூர்  மாவட்டத்திலுள்ள 11 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .கொரோனா பரிசோதனைகள் பொருத்த வரையில் கடந்த 24 மணிநேரத்தில் வேலூர் மாவட்டத்தில் 3101 நபர்களுக்கும் , திருப்பத்தூர் மாவட்டத்தில் 2107 நபர்களுக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1857  நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு , இதில் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோர்களில் ௦.9 % நபர்களுக்கும் , திருப்பத்தூர் மாவட்டத்தில்  1 .0 % நபர்களுக்கும் , ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 .2% நபர்களுக்கும் கொரோனா பாசிட்டிவ் என்ற முடிவுகள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .