வேலூர் காய்கறி மார்க்கெட்டில் இன்று அதிகாலை , மாமூல் தரவில்லை என்று காய்கறி வியாபாரியை , ரவுடி ஒருவர் , கத்தியால் , தலை மட்டும் முதுகு பகுதியில் தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பி சென்றுள்ளார். தொடர்ந்து காய்கறி மார்க்கெட்டில் மாமூல் கேட்டு , அராஜகம் செய்துவரும் ரவுடி உதயா மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்து , உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று , காய்கறி மார்க்கெட் சங்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் .
வேலூர் கோட்டைக்கு எதிப்புறம் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே இயங்கி வருகிறது , நேதாஜி மார்க்கெட் . இங்கு அதிகாலை 1 மணியிலிருந்து , காய்கறி மொத்த வியாபாரம் தொடங்கி நடந்து வரும் .
வேலூர் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நூற்று கணக்கான , மொத்த காய்கறி வியாபாரிகள் , இங்கு கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர் .
இவர்களைப் போலவே சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த பாலு (வயது 48 ) என்பவர் காய்கறி மொத்த வியபாரம் செய்து வருகின்றார் . இன்று காலை 4 மணியளவில் அவர் வியாபாரத்துக்காக , கடையை எடுத்து வைத்து கொண்டு இருக்கும் பொழுது .
ஓல்ட் டவுன் பகுதியை சேர்ந்த , 'ஓல்ட் டவுன்' உதயா (வயது 33 ) என்பவர் , அவரது கூட்டாளிகள் 4 பேருடன் பாலுவின் கடைக்கு வந்துள்ளார் , வந்தவர் , பாலுவிடம் மாமூல் பணம் கேட்டு மிரட்டியுள்ளார் . அதற்கு பாலு 'இப்பொழுது தான் , கடையை திறந்து எடுத்து வைத்து கொண்டு இருக்கிறேன் , அதற்குள் பணம் கேட்டல் நான் எவ்வாறு தருவது' என்று ரவுடி உதயவிடம் முறையிட்டுள்ளார் .
இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி உதயா , தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த அரிவாளை , பின்பக்கமாக திருப்பி , பாலுவின் தலை மற்றும் முதுகு பகுதியில் சரமாரியாக தாக்கியுள்ளார் . அவர் அலறல் சத்தம் கேட்டு , பக்கத்துக் கடைக்காரர்கள் ஓடிவரவே , அங்கு இருந்து உதயா மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பித்து சென்றுள்ளனர் .
மேலும் காயமடைந்த பாலுவை அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் . சம்பவம் அறிந்து மருத்துவமனைக்கு வந்த வேலூர் வடக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் , சோமசுந்தரம் , பாலுவிடம் புகாரை பெற்று , தலைமறைவாக உள்ள ரவுடி , உதயா மீது இந்திய தண்டனை சட்டம் , பிரிவுகள் , 294 b (இழிவிவான வார்த்தைகள் பயன்படுத்துதல் ) , 324 (காயப்படுத்துதல் ) , 384 (மிரட்டி பணம் பறித்தல் ) மற்றும் பிரிவு 394 (கொள்ளை அடிக்க முற்படும்போது காயப்படுத்துதல் ) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரவுடி 'ஓல்ட் டவுன் ' உதயாவை தேடி வருகின்றனர் .
தொடரும் ரவுடி உதயாவின் அராஜகம் .
இந்த சம்பவம் தொடர்பாக , வேலூர் காய்கறி மார்க்கெட் தலைவர் A பாலுவை, தொடர்பு கொண்ட பொழுது . சமீப காலமாக ரவுடி உதயாவின் அராஜக போக்கு , எல்லை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது . சென்ற வாரம் கூட , மார்கெட்டிற்கு காய்கறி வாங்க வந்த வாடிக்கையாளர் ஒருவரை , ரவுடி சத்யா இருசக்கர வாகனத்தில் இடித்து கீழே தள்ளியுள்ளார் . இதை கண்டித்த வியாபாரி ஒருவரை , த்தியை எடுத்து காண்பித்து , கொலை மிரட்டல் விடுத்துள்ளார் . மேலும் தினமும் அதிகாலையிலே , அவரது கூட்டாளிகளுடன் , நேதாஜி மார்க்கெட் பகுதியில் மாமூல் வேட்டையில் இறங்கி , வியபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களை அச்சுறுத்தி வருகிறார் . இன்றைய சம்பவத்திற்கு பிறகு , "அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் எங்களது , காய்கறி சங்கத்தின் சார்பாக தனியாக புகார் ஒன்றை சமர்பித்துள்ளோம் என்று தெரிவித்தார் .
தலைமறைவாக உள்ள சத்யா மீது , அடிதடி , கொலைமிரட்டல் உள்ளிட்ட பல வழக்குகள் , வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .