வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இருந்து நேற்று முன்தினமும் இரவு சுமார் 7 மணியளவில் அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒடுகத்தூர் நோக்கி புறப்பட்டு சென்றது. பின்னர், இரவு 8:30 மணியளவில் ஒடுகத்தூர் பேருந்து நிலையம் அருகே அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு  வந்து கொண்டிருந்தது. அப்போது ஒடுக்கத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்க்க கூறி பெண் ஒருவர் கூறியள்ளார். ஆனால் பேருந்து அங்கு நிற்க்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அதில் பயணம் செய்த பெண்  ‘ஏன் பேருந்தை வலைவில் நிறுத்தவில்லை, நா அங்கு தான் இறங்க வேண்டும், என்று கூறி அரசு பேருந்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.


 


 






 


அப்போது நடத்துனர் அந்த பெண் பயணியிடம் அங்கு பேருந்து நிறுத்தம் கிடையாது, நான்கு முனை சந்திப்பில் தான் பேருந்து நிற்கும் என்று எடுத்து கூறியுள்ளார். ஆனால் நடத்துநர் கூறியதை எதையுமே கேட்காத அந்த பெண் பயணி "நாங்களும் ரவுடி தான் என்ற பாணியில்" திடீரென அந்த பெண் பயணி பையில் இருந்த சுத்தியலை  கையில் எடுத்துக்கொண்டு தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.  அதன் பிறகு கீழே இறங்கிய பெண் பயணி கையில் சுத்தியலை எடுத்துகொண்டு பேருந்தின் முன்பு நின்றுகொண்டு பேருந்து ஓட்டுநரிடம் தகராறில் ஈடுப்பட்டார். அப்போது பேருந்து ஓட்டுநர் அங்கு நிறுத்தம் கிடையாது என்று கூறியுள்ளார். அதற்கு  பெண் பயணி அதெல்லாம் எனக்கு தெரியாது, நீங்க சம்பளம் வாங்குறீங்க இல்ல எனக்கு அந்த இடத்தில் தான் இறங்கனும் என்று கூறி பேருந்தின் கண்ணாடியை உடைப்பது போல் ஆவேசமாக பேசினார்.


 




ஆனாலும், அந்த பெண்ணிடம் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் சக பயணிகள் என அனைவரும் எவ்வளவு கூறியும் பெண் பயணியின் கோவம் அடங்கவில்லை. பின்னர், ஒரு கட்டத்தில் அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கி விட்டனர். இதனை கவனித்த அந்த பெண் அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்தை நிறுத்த வில்லை என்று கூறி பெண் ஒருவர் கையில் சுத்தியலை எடுத்துக்கொண்டு பேருந்து ஓட்டுநரை மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.