7 மாதங்களுக்குள் 551 கோயில்களுக்கு குடமுழுக்கு - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

''1600 கோடி சொத்தை மீட்ட பெருமை முதல்வரையே சாரும் திருக்கோவில் வரலாற்றில் ஒரு மறுமலர்ச்சியை 5 ஆண்டுகளுக்குள் முதல்வர் செய்வார்''

Continues below advertisement

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலுக்கான ரோப் கார் அமைவிடத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளை மாநில இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை  அமைச்சர் பிகே.சேகர்பாபு இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

Continues below advertisement


பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, தமிழகத்தில் வரும் 7 மாதங்களில் 551 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 6 மாதத்தில் ஆக்கிரமிப்புக்காரர்களிடம் இருந்த ரூபாய் 1600 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டு உள்ளது. தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற 47 திருக்கோயில்களுக்கு வரைவு திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த கோவில்களுக்கு பேருந்து வசதிகள், கழிவறை வசதிள், மலைப்பாதையில் உள்ள கோவில்களுக்கு மருத்துவமனைகள், மடப்பள்ளி, ரோப் கார் வசதி, தானியங்கி லிப்ட் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும்.


இந்த இந்து சமய அறநிலைய துறை என்பது கடந்த ஆட்சியில் ஏதோ சம்பிரதாயத்துக்காக செயல்பட்டு வந்த இந்த துறையை தற்போது வெளிப்படை தன்மையோடு செயல்படக்கூடிய துறையாக மாற்றி புத்துணர்ச்சி அளித்துள்ளார் தமிழக முதல்வர். மேலும் வரும் 5 ஆண்டுகளில் இந்து அறநிலையத்துறையிலும், திருக்கோவில்கள் வரலாற்றிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட முதல்வர் வழிவகை செய்வார். தமிழகத்தில் மொழி, இன, ஜாதி மதங்களை கடந்து இந்து அறநிலைத்துறை செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் பழனி கோவிலுக்கு அடுத்தபடியாக திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. எனவே ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் அங்கு நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்து இருப்பதாகவும் தெரிவித்தார். சோளிங்கரில்  ஆஞ்சநேயர் கோயிலுக்கு 53 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.


பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு கூறுகையில்,
சோளிங்கர் நரசிம்மர் சாமி கோவிலுக்கு வரும் ஆறு மாத காலத்திற்குள் ரோப்கார் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திட்டத்தை முதல்வர் விரைவு படுத்தியிருக்கிறார். கிட்டத்தட்ட பணிகழ் முடிவடைந்துவிட்டது. ரோப்காரில் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மூன்று மாத காலத்திற்குள்ளாக வெள்ளோட்டம் விடப்பட்டு, பின்னர் ரோப்கார் இயக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதே சமயம் வரும் பக்தர்கள் வாகனம் இருத்தம், கழிவறை வசதி, இளைப்பாரும் வசதி உள்ளிட்ட பல வசதிகளும் செய்துதரப்பட உள்ளது. நரசிம்பர் கோவிலுக்கு வரும் பக்கதர்கள், முதியவர்கள், இயலிதோர் பயனடையும் வகையில் திட்டம் வெகு விரைவில் நிறைவேற்றப்படும். இந்து அறநிலை துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது குறிப்பாக அவசியம் தேவைப் படுகின்ற இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. விரைவில் தேவையான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். சென்னை கபாலீஸ்வரர் கலைக்கல்லூரியில் இந்த ஆண்டு 240 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இக் கல்லூரியில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சைவ மற்றும் வைணவ கோப்புகளில் 150 மாணவர்கள் சேர்ந்து இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கோவில் நில ஆங்கிரமிப்புகளை பொறுத்தவரை தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறது. தினமும் ஒரு ஆக்கிரமிப்பு இடத்தையாவது மீட்டு கோவிலுக்கு சொந்தமாக்கி வருகிறோம் என அமைச்சர் கூறினார்.


இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி, அரக்கோணம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன்,  மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola