வடகிழக்கு பருவமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பொழிவதால் ஆறுகள், ஓடைகள், குட்டைகள், தாழ்வான பகுதிகளில் இருந்து அதிகமான மழை நீர் வெளியேறுவதாலும், அண்டை மாநிலமான ஆந்திராவில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்கிருந்து அதிகப்படியான மழை நீர் வெளியேறுவதால் வேலூர் மாவட்டத்தில் பாயும் பாலாறு, பொன்னையாறு, குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆறு ஆகியவற்றில் நீரின் வேகம் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் நீர் நிலைகளுக்கு அருகாமையில் சென்று புகைப்படம் எடுப்பது, மீன்பிடிப்பது, மற்றும் வேடிக்கை பார்ப்பது போன்ற நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாமெனவும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியாக வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பொது மக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொடைக்கானலில் ஊர் முதலாளியாக பட்டம் சூட்டப்பட்ட 27 வயது இளைஞர்
அதேபோல பாலாற்றில் ஏற்பட்ட அதிகபடியான வெள்ளத்தால் வேலூர் மாவட்டத்துக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் காவிரி கூட்டுக் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில். காவேரி கூட்டு குடிநீர் குழாய்கள் முழும் சேதம் அடைதுள்ளதால் வேலூர் மாநகராட்சி, பேர்ணாம்பட் நகராட்சி, குடியாத்தம் நகராட்சி, பள்ளிகொண்டா பேரூராட்சி, ஒடுக்கத்தூர் பேரூராட்சி, மாதனூர் ஒன்றியம், அணைக்கட்டு ஒன்றியம், கே.வி.குப்பம் ஒன்றியம், குடியாத்தம் ஒன்றியம், வேலூர் ஒன்றியம், காட்பாடி ஒன்றியம், பேர்ணாம்பட் ஒன்றியம், கணியம்பாடி ஒன்றியம் ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் தடைபட்டிருப்பதாகவும் குழாய்கள் சரிசெய்த பிறகு மீண்டும் குடிநீர் வழங்கப்படும் என்றும். அதுவரை உள்ளாட்சி அமைப்புகள் உள்ளூர் குடிநீர் ஆதாரத்தை கொண்டு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்றும். பொதுமக்கள் குடி நீரை சிக்கனமாக பயன் படுத்தக் கோரியும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாளாளர் - வகுப்பறைகளுக்கு சீல் வைப்பு
வேலூர் மாவட்டத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் ஏரிகள் குட்டைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தொடர்ச்சியாக மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தலையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இதனை ஒருசிலர் பொருட்படுத்தாத நிலையில் தொடர் உயிரிழப்புகளும் வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தூங்கிக் கொண்டிருக்கும் அரசுக்கு விடியல் என்று பெயர் - பாஜக செய்தி தொடர்பாளர் சீனிவாசன் கிண்டல்