திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த வீரளூர் கிராமத்தில் சுடுகாட்டு செல்வது தொடர்பான தகராறு காரணமாக ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது.


நேற்று இரவு அருந்ததி காலனியை சேர்ந்த அமுதா என்பவர் திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலத்தை வழக்கமாக அருந்ததி காலனி சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட சுடுகாட்டு பாதையில் செல்லாமல் ஊர் பாதை வழியாக செல்வதாக முடிவு செய்யப்பட்டதால் இரு சமூகத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.


இதில் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களின் வீடுகள் மற்றும் இருசக்கர வாகனத்தை  அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக அருந்ததியர் காலனி  பகுதியைச் சேர்ந்த 10க்கும்  மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட அருந்ததியர் காலனி பகுதியில் பாதிக்கப்பட்ட இடத்தில் வீடு வீடாக சென்று இயக்குனர் லெனின் பாரதி விசாரித்தார். 


 




 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் லெனின் பாரதி.. 


“தீண்டாமை கொடும் செயலாக பார்க்கப் படுகிறது. தீண்டாமை அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது மிகவும் வேதனையாக உள்ளது. இந்த அருந்ததி மக்களின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் வீடுகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளது. உழைத்து விட்டு மக்கள் சொந்த ஊரில் பண்டிகையை கொண்டாடும் போது இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இறந்தவரின் உடலை பொது வெளியில் எடுத்து வரக்கூடாது என்று கூறியுள்ளனர். இதே போன்று இவர்கள் நாளை ஆம்புலன்ஸ் இந்த வழியாக  வரகூடாது அல்லது பொதுமக்கள் நடக்கவே கூடாது என்றும் அடுத்தபடியாக கூறுவார்கள்,


 


 




பொது வழி என்பது ஒரு சாதிக்கான சாலையா அல்லது அரசாங்கத்தின்  சாலையா?  இதுவரையில் காவல்துறை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு வீடுகளாக சென்று காவல் துறையினர் ஆய்வு செய்து அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நியாயம் கிடைக்க வேண்டும். எந்த வகையிலும் தீண்டாமை என்பது மனித இனத்திற்கு எதிரானது. வளர்ந்த காலத்தில் நாம் இன்னும் பின்னோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உரியவர்களிடத்தில் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண