திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கொண்டநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு ( வயது 53 ) இவருடைய மகன் நரசிம்மன் (30) மாமரம் விதைகளை உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த ராஜா (60)  இவருக்கு இரண்டு மனைவி முதல் மனைவி மங்கைக்கு , நந்தினி (30 ) , யுவராஜா (28) மற்றும்  கார்த்திக் (24) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

 



 

இரண்டாவது மனைவி வளர்மதி , இவருக்கும் அனிதா (27) அகிலா(24) அஜித் (24) என மூன்று பிள்ளைகள் உள்ளனர் . ராஜாவின் இரண்டாவது மனைவி மகளான அனிதாவை நரசிம்மன் ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

 

ராஜா தனக்குச் சொந்தமான சொத்தை சில வருடங்களுக்கு முன்பு அதேபகுதியை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு விற்றுவிட்டார் . அதனைப் பெரியசாமி என்ற நபரிடமிருந்து நரசிம்மன் நான்காவது நபராக  45 லட்சத்திற்கு வாங்கி உள்ளார்.

 

இதனால் ராஜா தனது சொத்தை தந்து சொந்த மருமகனே வாங்கி விட்டாரே என்று ஆத்திரத்தில் நரசிம்மன் மற்றும் அவரது மகளான அனிதாவிடம் , அந்த சொத்தை  மீண்டும் தனது பெயரில் எழுதி வைக்கக் கோரி பல முறை தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் .

 

அதனைத் தொடர்ந்து இன்று தனது மருமகன் மற்றும் மகள்  என்றும் பாராமல் நரசிம்மன் குடும்பத்தை முழுவதுமாக ஒழித்துக் கட்ட முடிவு செய்த ராஜாவின் முதல் மனைவியின் மகன்களான யுவராஜா மற்றும் கார்த்திக் ஆகிய இருவரின் ஒத்தழைப்பின் பேரில் ,  நரசிம்மன் வீட்டில் சுமார் 20 (ஜெலட்டிங்குகிகள் ) நாட்டு வெடிகுண்டை வைத்து தகர்க்க முடிவு செய்து , அவரது வீட்டின்  சமையலறையின் மேல் கட்டிவைத்து விட்டு சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள மின்கம்பத்தில் ஒயர் மூலம் கனெக்ஷன் கொடுக்க முயற்சி செய்துள்ளார் .

 

அப்போது விடியற்காலை 3 மணி அளவில் வீட்டின் வெளியே படுத்திருந்த சேட்டு ஏதோ சத்தம் கேட்பது அறிந்து வெளியே சென்று பார்த்துள்ளார் அப்பொழுது  கார்த்திக் மற்றும் யுவராஜா சமையலறையில் நாட்டு வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு இருந்தனர் , அப்பொழுது சேட்டு வருவதைப் பார்த்து இருவரும் கீழே குதித்துத் தப்பி ஓடியுள்ளனர்.

 

 



 

இதனை தொடர்ந்து மின் கம்பத்தில் கனகேஷன் கொடுக்க தயார் நிலையில் வைத்திருந்த  ஒயரை துண்டித்து விட்டு இருவரையும் சேட்டு துரத்திச் சென்று உள்ளார் . பின்னர் கந்திலி போலீசாருக்கு இந்த பயங்கர சம்பவம் தொர்பாக சேட்டு தகவல் தெரிவித்துள்ளார்.

 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி  போலீசார் சமையலறையில் கட்டப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டைப் பாதுகாப்பாக  மீட்டு எடுத்துக்கொண்டு ராஜா ,  யுவராஜா மற்றும் கார்த்திக் ஆகிய மூவரையும்  வலைவீசி தேடி வருகின்றனர்.

 



 

சொத்து பிரச்சனை காரணமாக தன் சொந்த மருமகனையே  நாட்டு வெடிகுண்டு வைத்துக் கொள்ள முயற்சி செய்த  சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் , அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

 

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுத் தலைமறைவாக உள்ள ராஜா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து செயல்பட்ட குற்றவாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர் .