வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை முருகன் கோயில் அருகே கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் கன்னரதேவனின் இரண்டு கல்வெட்டுகள் சிதிலமடைந்து காணப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் தொல்லியல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது வள்ளிமலை கோயில் அருகில் சிதிலமடைந்த இரண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. அந்த கல்வெட்டுகள் கி.பி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் கிருஷ்ணன் இராட்டிரகூட மன்னன் கன்னரதேவனின்  வெற்றியைப் பற்றி இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.


இக்கல்வெட்டானது தமிழிலும், கன்னடத்திலும் ஒரே செய்தியைக் குறிப்பிடுகிறது. அந்தக் கல்வெட்டானது நாளடைவில் மண்ணுக்குள் புதைந்தும் மற்றும் செடி கொடிகளால் சேதாரமாகி இருந்தது . அதனை இன்று வருவாய்த்துறையினர் மற்றும் தொல்லியல் துறையினர் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவின் பேரில் வேலூர் அரசு அருங்காட்சியர் காப்பாட்சியர் சரவணனிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த கல்வெட்டு பாதுகாப்பாக நான்கு சக்கர வாகனத்தில் ஏற்றப்பட்டு வேலூர் அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வையாக வைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டானது 2011 ஆம் ஆண்டு வள்ளிமலை இடும்பன் கோயில் அருகே கண்டெடுக்கப்பட்டு அதை பாதுகாப்பதற்காக முருகன் சன்னதி அருகே அப்போதைய தொல்லியல் துறை அதிகாரிகள் வைத்து விட்டு சென்றுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.