Adi Annamalai Temple: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களிலே மிகவும் புகழ்பெற்ற கோயிலாக திகழ்வது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். அண்ணாமலையார் கோயில் உருவாவதற்கு முன்பே திருவண்ணாமலையில் முதன் முதலில் உருவானது ஆதி அடி அண்ணாமலையார் கோயில்.

ஆதி அண்ணாமலை கோவில் 


திருவண்ணாமலை கிரிவலப் பாதை 14 கிலோமீட்டர் கொண்டது. இதில் ஏழாவது கிலோமீட்டரில் மைய பகுதியான அடி அண்ணாமலை கிராமத்தில்  அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆதி அண்ணாமலை  திருத்தலமாக உள்ளது. இந்த திருத்தலத்தில் தினம்தோறும் மூன்று கால பூஜை நடைபெறுகிறது. இறைவியின் திருநாமம் உண்ணாமுலையம்மாள்.

 

பிரம்மதேவர் பிரதிஷ்டை செய்த மூலவர் ஆதி அடி அண்ணாமலை கோவிலில் அமைந்திருப்பது சிறப்பானது. நால்வர்களில் ஒருவரான மாணிக்கவாசகர்  திருவெம்பாவை பாடிய திருத்தலமாகவும் உள்ளது. அண்ணாமலையாரின் முதல் திருத்தலமாக உள்ளது. அதாவது ஆதி திருத்தலம் அதனால் ஆதி அண்ணாமலையார் திருக்கோவில் என போற்றப்படுகிறது. அணி அண்ணாமலை என்றும் சொல்வார்கள். படைப்புக் கடவுளான பிரம்ம தேவர் தனது புதல்வரும் சனகாதி முனிவர்களில் ஒருவருமான சனகரிடம், வேறெங்கும் களைய முடியாத பாவங்கள் அணி அண்ணாமலையார் திருக்கோவிலில் களையப்படும் என்று கூறியதாக புராணத் தகவல் கூறப்படுகிறது.



சிவபெருமாளின் அடி முடி காணாத விஷ்ணு,பிரம்மா


ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான பெருமாளுக்கும் தங்களுள் யார் பெரியவர் என்ற  போட்டி நிலவியது. இருவருக்கும் உண்மையை உணர்த்த சிவபெருமான் அவர்கள் முன்பாகத் தோன்றினார். என்னுடைய அடி அல்லது முடிகளில் ஏதாவது ஒன்றை யார் முதலில் கண்டு திரும்புகிறார்களோ அவரே பெரியவர் என்று கூறினார். சிவபெருமான் விடுத்த சவாலை இருவரும் ஒப்புக்கொண்டனர். மகாவிஷ்ணு, சிவபெருமானின் அடியைக் காண  வராக  உருவம் எடுத்து  பூமியைக் குடைந்து கொண்டு சென்றார்.

 

பின்னர் பிரம்மதேவன் சிவபெருமானின் முடியைக் காண அன்னப் பறவை வடிவம் எடுத்து மேல்நோக்கி பறந்து சென்றார். வெகு உயரம் சென்ற பிறகும் சிவபெருமானின் முடியைக் காண முடியவில்லை. அப்போது சிவபெருமானின்  முடியில் இருந்து விழுந்த தாழம்பூ கீழ் நோக்கி வந்து  கொண்டிருந்தபோது தாழம்பூவைக் கண்ட பிரம்மன் அதனிடம் தான்  சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாக சொல்லும்படி கூறினார். அதே சமயம்  அடியைக் காண சென்ற பெருமாள்  காண முடியாமல்  திரும்பி தன்னுடைய  தோல்வியை சிவபெருமானிடம்  ஒப்புக்கொண்டார். பிரம்மனோ தான் முடியைக் கண்டு திரும்பியதாக பொய்  தெரிவித்தார்  அவருக்கு தாழம்பூ  பொய்சாட்சி கூறியது. அனைத்தும் அறிந்த சிவபெருமான் செய்த தவறுக்கு தண்டனையாக பிரம்மதேவருக்கும், தாழம்பூவுக்கும் சாபம் வழங்கியதாக புராணம் கூறுகிறது. பிரம்மனுக்கு பூவுலகில் திருக்கோவில் எதுவும் இருக்காது  எனவும்  மற்றும் பொய் சாட்சி உரைத்த தாழம்பூவை சிவபூஜையில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது.



 

இந்த தாழம்பூ ஆண்டுக்கு ஒரு முறை அதாவது சிவ ராத்திரி தினத்தன்று சிவபெருமானின் பூஜையில் வைக்கப்படுகிறது. சிவபெருமானிடம் முறையிடுவதற்கு முன், சிவ பூஜையில் ஈடுபட எண்ணிய பிரம்மதேவர், தன் திருக்கரங்களால் சிவலிங்கத்தை நிறுவினார். அந்த லிங்கத் திருமேனியை இன்றும் நாம், ஆதி அண்ணாமலையார் திருக்கோவிலில் மூலவராக தரிசிக்கலாம்.


ஆதி அண்ணாமலையார் கோவிலின் சிறப்பு 


அடி அண்ணாமலை சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் விமோசனம் கிடைக்கும். பாவ நிவர்த்திக்காக பிரம்மாவின்னால் சபிக்கப்பட்டு மற்றும் பூஜிக்கப்பட்ட லிங்கம் ஆதி அண்ணாமலையார் ஆதி  அருணாச்சலேஷ்வரர் அடி அண்ணாமலையார் திருத்தலம்மாகும். நினைத்தாலே முக்தி தரும் இத்தளத்தினை தரிசித்தால் முன் ஜென்ம வினைகள் பிரம்மஹத்தி தோஷங்கள் நீங்கும் விவாக பிராப்தி கைகூடும் மற்றும் சகல சௌபாக்கியங்களும் கைகூடும் இத் திருத்தலத்தில் தரிசித்தால் என்கிறது ஐதீகம்.

 

இது போன்ற ஆன்மீக சிறப்பு கொண்ட திருத்தலங்களின் வரலாற்றை www.abpnadu.com என்ற ABP நாடு இணையதளத்தில் காணலாம்.