திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த படவேடு கிராமத்தில் ரேணுகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குமார் என்பவர் தரை வாடகைக்கு எடுத்து அதில் கட்டிடம் கட்டி செல்வமூர்த்தி என்பவரிடம் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 9 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு மாத வாடகை 3000 ரூபாய்க்கு கடையை விட்டுள்ளார். மேலும் கடந்த ஆண்டு குமார் இறந்து விட்டார். அதன் பிறகு அவருடைய மகனான ராமு கடையை எடுத்து நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அவர்களிடம் சென்று ராமு தங்களிடம் கடையை ஒப்படைக்குமாறு செல்வமூர்த்தியிடம் கேட்டுள்ளார். அதன் பிறகு செல்வமூர்த்தி கடையை ஒப்படைக்க முடியாது என தெரிவித்துள்ளார். இதனால் ராமு கிராமத்தில் உள்ள முக்கிய நபர்களிடம் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி கடை வழங்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் செல்வமுர்த்தி கடையை ஒப்படைக்காமல் செல்வமூர்த்தியின் மகன்கள் ஜீவா மற்றும் உதயா ஆகியோர் ராமுவிடம் தகறாரில் ஈடுபட்டு கத்தியால் ராமுவை தலையில் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ராமுவை அக்கம் பக்கத்தில் உள்ள கடைக்காரர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


 




இந்த சம்பவம் தொடர்பாக தன் மனைவி அடித்து துன்புறுத்தியதாக ராணுவத்தில் பணியாற்றும் பிரபாகரன் என்பவர் தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த சம்பவத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் முதற்கட்ட விசாரணை நடத்தி ராணுவ வீரரின் மனைவிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று மறுப்பு தெரிவித்தார். தாக்குதலில் காயம் அடைந்த கீர்த்தி சில நாட்களாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் மானபங்கப்படுத்தப்பட்டதாக ராணுவ வீரரும் கீர்த்தியின் கணவருமான பிரபாகரன் புகார் அளித்த நிலையில் மகளிர் ஆணைய தலைவி குமாரி நேற்று மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினார். கீர்த்தியின் பாதுகாப்புக்கு மருத்துவமனையில் 2 பெண் காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்


 




 


இதனிடையே ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் பிரபாகரன் அடுக்கம்பாறை வந்ததாக கூறப்படுகிறது. அங்கு மனைவி கீர்த்தியை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து கார் மூலம், மாலை 5 மணி அளவில் அழைத்துச் சென்றுள்ளார், அவருடன் 2 பெண் காவல்துறையினர் பாதுகாப்புக்காக இருச்சக்கர வாகனத்தில் காரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். கண்ணமங்கலம் காவல் நிலையம் அருகே சென்றபோது, தங்களை விசாரணைக்கு போலீசார் அழைத்து செல்வார்களோ என பயந்து காரை திருப்பி கண் இமைக்கும் நேரத்தில் வேலூர் நோக்கி சென்று மனைவி கீர்த்தியுடன் பிரபாகரன் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து பெண் போலீசார் சந்தவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் காவல்துறையினர் தலைமறைவான ராணுவ வீரர் பிரபாகரன் மற்றும் அவரது மனைவி கீர்த்தியை தேடி வருகின்றனர். விசாரணைக்கு பயந்து ராணுவ வீரர் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.