திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் தர்மராஜா கோவில் பகுதியில் உள்ள ஆரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி வயது (14) தினந்தோறும் பள்ளிக்கு நடத்து சென்று படித்துவிட்டு வீட்டிற்கு வருவார். மாணவி பள்ளிக்கு நடந்து சென்று வருவதை அறிந்த அதே பகுதியை சேர்ந்த ஜெகன் வயது (21) பள்ளி மாணவி பள்ளிக்கு சென்று வரும்போது பின்தொடர்ந்தது சென்று வருவாதாக கூறப்படுகிறது. சிலநாட்கள் கழித்து ஜெகன் மாணவியை காதலிப்பதாக கூறி தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். இதற்கு மறுத்துள்ளார் மாணவி. தொடர்ந்து மாணவியை பின்தொடர்ந்த ஜெகன் மாணவியிடம் நண்பர்களாக இருக்கலாம் என்று கூறி இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாணவியிடம் சில நாட்களுக்கு முன்பு ஜெகன் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 


 




அதனைத்தொடர்ந்து மாணவியின் வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு ஜெகன் வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு 9-ம் வகுப்பு மாணவி வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது மாணவியை பெற்றோர் ஆரணி அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி 4-மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது. பின்னர் மருத்துவர்கள் மாணவியின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனை கேட்ட பெற்றோர் அதிச்சி அடைந்தனர். பின்னர் மாணவியிடம் இதுகுறித்து பெற்றோர் கேட்டுள்ளனர். அதற்கு மாணவி நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். 


 




இதனையொடுத்து மாணவியின் தாயார் ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஜெகனை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு ஜெகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் காவல்துறையினர் ஜெகனை ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில்ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.