திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் வெளி ஊர்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் செய்யார் நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். அதில் அரசு கலைக் கல்லூரி பட்டியல் இன மாணவர்கள் மற்றும் மலைவாழ் மாணவர்கள் தங்கும் விடுதிதியில் 40- மாணவர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர். தினந்தோறும் கல்லூரிக்கு சென்று வரும் மாணவர்கள் விடுதிக்கு வந்த உடன் அடிக்கடி கல்லூரி மாணவர்களுக்குள் ரேக்கிங் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருவது வழக்கமாக ஒன்று உள்ளது.அதன்படி நேற்று அந்த அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் பயின்று விட்டு வழக்கம்போல் விடுதிக்கு வந்தனர்.


 




அப்போது விடுதியில் இருந்த சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை வரைவைத்து துணிகள் துவைப்பது பணிகளை செய்யசொல்வது வேலைகளை செய்ய சொன்னர்கள். ஆனால் சொன்ன பணியை ஜூனியர் மாணவர்கள் செய்யாததால், சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை வரிசையில் நிற்க வைத்து சீனியர் மாணவர்கள் சாட்டை கயிறு மூலம் ஜூனியர் மாணவர்களுக்கு சாட்டையடி கொடுத்து தண்டனை வழங்கி ராகிங் செய்துள்ளனர். அரசு மாணவர் விடுதியில் ராகிங் சண்டை குறித்த வீடியோவை சம்பவத்தை அங்குள்ள மாணவர்கள் யாரோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி கல்லூரி முதல்வர் கலைவாணி நேரில் சென்று பாதிக்கப்பட்ட ஜுனியர் மாணவர்களிடம் விசாரணை நடத்தி மாணவர்களை ராகிங் செய்த சீனியர் மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து மாணவர்களின் செயலை பெற்றோர்களுக்கு தெரிவித்து பெற்றோர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர் மூலம் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த விசாரணையில் ஜுனியர் மாணவர்களை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் 9 பேரை மாவட்ட ஆட்சியர் பகடி வதைக்குழு மற்றும் கல்லூரி ஆட்சி மன்ற குழுவின் தீர்மானத்தின் படி 9 மாணவர்களை ஒரு மாதம் வரை தற்காலிக நீக்கம் செய்தும், இம்மாணவர்கள் கல்லூரி விடுதிக்கு வருதல் கூடாது எனவும் உத்தரவிட்டனர். 


மேலும் மாணவர்களை தாக்கிய 9 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி செய்யார் காவல்நிலையத்தில் அந்த குழுவினர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் செய்யார் காவல்துறையினர் 9 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.