கோவையில் இருந்து திருவண்ணாமலை வழியாக சென்னைக்கு காலி பாட்டில்களை ஏற்றி கொண்டு வந்த சரக்கு லாரி நேற்று இரவு திருவண்ணாமலை அடுத்த கோளாப்பாடி கிராமம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்பொழுது திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரை சேர்ந்த காமாட்சி வயது (50) தனது மகன் சக்திவேலுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்தியம் பார்த்துவிட்டு நேற்று இரவு காரில் சாத்தனூருக்கு சென்று கொண்டிருந்தனர். கோயம்பத்தூரில் இருந்து எதிரே வந்த சரக்கு லாரி காரின் மீது நேருக்கு நேர் அதி பயங்கர சத்தத்துடன் மோதியது. அதில் காரில் பயணம் செய்த ஓட்டுநர் இளையராஜா, காமாட்சி, சக்திவேல் ஆகியோர் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். வாகனம் மோதிய சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் காரில் வந்தவர்களை காப்பற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த கிராமிய காவல்துறையினர் சம்ப இடத்திற்கு விரைந்து உயிரிழந்த 3 நபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் கோவையைச் சேர்ந்த சரக்கு லாரி ஓட்டுனர் ஐயப்பனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அருகே உள்ள பெரியகல்லப்பாடிபுதூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் வயது (29). அதே பகுதியை சேர்ந்த துரை மனைவி சித்ரா வயது (24), விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கொடுக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மனைவி இந்திரா வயது (44) ஆகியோர் இவரது உறவினர்களாவர். பெரியகல்லப்பாடியில் உள்ள இவர்களது உறவினர் இறந்ததையொட்டி துக்கம் விசாரிக்க இந்திரா வந்திருந்தார். அவரையும் சித்ராவையும் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பெரியகல்லப்பாடிக்கு விக்னேஷ் சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது வெறையூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது வேலூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு சென்ற அரசு விரைவு பேருந்து இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் இந்திரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சித்ரா, விக்னேஷ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே அவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் வெறையூர் ஆய்வாளர் செல்வநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இருசக்கர மீது அரசு விரைவு பேருந்து மோதியதில் 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.