ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்  (வேலூர் , திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில்) புதிதாக 93 நபர்களுக்கு கொரோனா தோற்று உறுதி . இருவர் கொரோனா நோய் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர்.


வேலூர்  மாவட்டத்தில், இன்று மட்டும் 34  நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47861 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 43 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 46,379 ஆக அதிகரித்துள்ளது. இன்று வேலூர் மாவட்டத்தில் மட்டும் கொரோனா நோய் தொற்றுக்கு இருவர் பலி ஆனதை  தொடர்ந்து  கொரோனா நோய்த்தொற்றால் வேலூர் மாவட்டத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1094 ஆக உயர்ந்துள்ளது  .





இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில்  388  நபர்கள் கொரோனா பாதிப்பிற்காக வேலூர் மாவட்டத்திலுள்ள 9  க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .


இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் , இன்று மட்டும் 28  நபர்களுக்கு கொரோனா நோய்  பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 41806  ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 35 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 40740 ஆக அதிகரித்துள்ளது. இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதியதாக உயிரிழப்புகள் ஏதும் பதிவாகாததால் கொரோனா நோய் தொற்றுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 739 ஆகவே உள்ளது  .


இதன்மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில்  327   நபர்கள் கொரோனா பாதிப்பிற்காக ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 10 கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .





ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் மற்றொரு அங்கமான திருப்பத்தூர் மாவட்டத்தில் , இன்று மட்டும் 31  நபர்களுக்கு கொரோனா நோய்  பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28094  ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 28 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 27181 ஆக அதிகரித்துள்ளது. இன்று திருப்பத்தூர்  மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்புகள் ஏதும் பொடிவு செய்யப்படாத நிலையில்  கொரோனா நோய் தொற்றுக்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 598 ஆகவேயுள்ளது . இதன்மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில்  327   நபர்கள் கொரோனா பாதிப்பிற்காக திருப்பத்தூர்  மாவட்டத்திலுள்ள 11 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .




கொரோனா பரிசோதனைகள் பொருத்தவரையில் கடந்த 24 மணிநேரத்தில் வேலூர் மாவட்டத்தில் 2818 நபர்களுக்கும் , திருப்பத்தூர் மாவட்டத்தில் 2066 நபர்களுக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1789  நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு , இதில் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோர்களில் 1 .2 % நபர்களுக்கும் , திருப்பத்தூர் மாவட்டத்தில்  1 .3 % நபர்களுக்கும் , ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 .3% நபர்களுக்கும் கொரோனா பாசிட்டிவ் என்ற முடிவுகள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .