திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர பகுதியில் உள்ள மில்லர்ஸ் சாலை மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் மற்றும் வேலப்பாடியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் ஆகிய 2 முகாம்களை சேர்ந்த 111 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டும் பணி ரூபாய் 5.56 கோடி மதிப்பில் தச்சூர் சமத்துவபுரம் அருகே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், அரசுத்துறை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அடுத்த மாதம் (அக்டோபர்) 15 தேதிக்குள் இப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். மழைக்காலம் என்பதால் கட்டுமான பணி பாதிக்க கூடாது என்றும். அதனால் மழைக்காலத்திற்கு முன்பாகவே விரைந்து பணிகளை முடித்து விட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டார்.


 




 


அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் பா.முருகேஷ் பேசுகையில், 


ஆரணியில் தனித்தனியாக இயங்கி வந்த இரண்டு அகதிகள் முகாம்களை இடித்துவிட்டு ஒருங்கிணைந்த இலங்கை தமிழர்கள் குடியிருப்பு பகுதி தச்சூர் சமத்துவபுரம் அருகே ரூபாய் 5.56 கோடி மதிப்பில் 111 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் சேதமடைந்த குடியிருப்பு வீடுகளை பராமரிக்க ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ரூபாய் 50 ஆயிரம் வீதம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 100 வீடுகளில் 82 வீடுகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இங்கு வாழ்ந்து வந்த ஒரு சிலர் வீடுகளை விற்று விட்டு வெளியே சென்று உள்ளனர். இது போன்ற உள்ள வீடுகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது என்று கூறினார். ஆரணியில் உள்ள ஒரு தனியார் சைவ உணவகத்தில் பார்சல் உணவில் எலி தலை இருந்தது குறித்து பத்திரிகையாளர் கேட்டபோது, ஆரணியில் அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைத்து உணவகங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


 




சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைத்து உணவகங்களிலும் ஆய்வு பணி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆரணியில் உணவகங்களில் ஒட்டுமொத்த ஆய்வு பணி மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளேன் என இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் தரமற்ற உணவு வழங்கிய உணவகம் சீல் வைக்கப்படுமா என கேட்ட கேள்விக்கு முதலில் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் அதன் பின்னர் சீல் வைக்கப்படும் என பதிலளித்தார். இதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள கீழ்நாத்தூர் தொடக்கப்பள்ளியினை ஆய்வு மேற்கொண்டு பள்ளியின் பயிலும் மாணவர்களின் அறிவு ஆற்றல் குறித்தும், பள்ளியினை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் , மாணவ மாணவிகளுக்கு வழங்கும் மத்திய உணவின் தரத்தை குறித்து மாணவர்களிடம் கேட்டரிந்தார். இந்த ஆய்வின் போது ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி, தாசில்தார் ஜெகதீசன், மற்றும் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சபிதா, திலகவதி, ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர் கோவேந்திரன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் ஊழியர்கள் உடனிருந்தனர்.