திருவண்ணாமலை மாவட்டத்திற்கான மொத்த நீர் தேவையில், 40 சதவீதம் தென்மேற்கு பருவமழை காலத்திலும், 60 சதவீதம் வடகிழக்கு பருவமழை காலத்திலும் பூர்த்தியாகும். ஆனால், வடகிழக்கு பருவமழை காலத்தில் எதிர்பாராமல் ஏற்படும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகளால், மாவட்டத்தின் தேவைக்கும் அதிகமான மழையும், அதனால் உயிர் மற்றும் பயிர் சேதமும் ஏற்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய கடந்த மாதத்திற்கு பிறகு, கடந்த 40 நாட்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் 61 கால்நடைகள் உயிரிழந்துள்ளது. 36 வீடுகள் முழுமையாகவும், 344 வீடுகள் பகுதியாகவும் இடிந்து விழுந்து சேதமடைந்திருக்கிறது. அதோடு, கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் பெய்த கனமழையின்போது கீழ்பென்னாத்தூரில் ஒருவரும், போளூரில் ஒருவரும், செய்யாறில் 3 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.



ஜமுனமுத்துர் அடிவாரத்தில் வெள்ளநீர் படவேடு காளசமுத்திரம் கேசவபுரம் ராமநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மழைநீர் சூழ்ந்துள்ளதால் கத்தரி தக்காளி உள்ளிட்ட பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் படவேடு செண்பகத் தோப்பு அணையை நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் பொதுப்பணி துறையினர் அணையை திறந்துள்ளதால் படவேடு உள்ளிட்ட பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிரில் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் நெற்பயிர் வீணாக போனதாக விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவித்தர். மேலும் இது சம்மந்தமாக ஊராட்சி மன்றத்திலும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த ஓரு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று ஏக்கருக்கு சுமார் 25ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் படவேடு பகுதியில் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளதாகவும் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்



இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் பேசுகையில், தற்போது பெய்துவரும் கனமழையின் காரணமாக ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேறாமல் தேங்கி நிற்கும் மழை வெள்ளத்தால், மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியிருக்கிறது.மாவட்டத்தில் அதிகபட்சமாக, கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, சேத்துப்பட்டு, வந்தவாசி பகுதிகளில் நெற்பயிர் சேதம் அதிகமாக உள்ளது எனவும்  வேளாண் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மழையினால் சேதமடைந்த நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.


ஆறு, குளங்களை தூர்வாராமல் அதிமுக அரசு விளம்பரத்தை மட்டுமே தேடிக்கொண்டது - ஐ.பெரியசாமி