ஆம்பூரில் பள்ளி மாணவனை வெறி நாய் கடிக்கும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பல  பகுதியில் கடந்த சில நாட்களாக  தெரு நாய்கள் அதிகரித்துள்ள நிலையில், நேற்றைய தினம் ஆம்பூர் வாத்திமனை குப்பா மசூதி பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவனை அங்கு சாலையில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று மாணவனை கடித்த நிலையில், உடனடியாக மாணவனை மீட்ட அப்பகுதி மக்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று முதலுதவி அளித்தனர். மேலும் மாணவனை தெரு நாய்கடிக்கும் சிசிடிவி காட்சியும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 

இதனை தொடர்ந்து ஆம்பூர் நகராட்சிக்குப்பட்ட பகுதியி கூட்டம் கூட்டமாக திரியும் நாய்கள் அவ்வழியே செல்லும் நபர்களை துரத்திச்சென்று கடிப்பதாகவும், இரு சக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் சிலர் கீழே விழுந்து காயமடைகின்றனர். பள்ளி செல்லும் மாணவ மாணவியர்களையும் விடாமல் துரத்துவதாகவும்,  எனவே பொது மக்களின் நலன் கருதி ஆம்பூர் பகுதியில் சுற்றி திரியும், தெரு நாய்களை பிடித்து  தெரு நாய் பெருக்கம் அதிகரிக்காமல் இருக்க அவற்றை கட்டுப்படுத்தும் வகையில், அவற்றுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய  வேண்டும் என ஆம்பூர் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் ஆம்பூர் நகராட்சி நிர்வாகம் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் கடும் குற்றம் சாட்டுகின்றனர்.



 

இதேபோன்று சுற்றுவட்டார கிராம பகுதிகளிலும் நாய்கள் சுற்றித் திரிவதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது