நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்கள் அக்னிஸ்தலமாக  விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவிலின் கருவறை பின்புறம் உள்ள பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 5.18 மணி அளவில் மேளதாளங்கள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க சொர்க்க வாசல் எனப்படும் வைகுண்ட வாயில் திறக்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் கற்பூர ஆரத்தியுடன் முதலில் வந்தனர். அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிறருக்கு கெடுதல் நினைப்பவர்கள் பாவம் செய்தவர்கள் நரகத்திற்கு செல்லாமல் சொர்க்கத்திற்கு செல்வதாக நினைத்து வைகுண்ட வாயிலில் கோவிந்தா கோவிந்தா என்று சுவாமியை வழிப்பட்டு வைகுண்ட வாயிலில் நுழைந்து வெளியே வரும் பக்தர்கள் 2668 அடி உயரம் கொண்ட மலையே சிவனாக காட்சி அளிக்ககூடிய அண்ணாமலையை வணங்கி வழிபட்டனர்.


 




இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகுண்ட வாயிலில் நுழைந்து சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் திருவண்ணாமலை அதன் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஆன்மீக பொதுமக்கள் என வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய அண்ணாமலையார் கோயிலில் குவிந்திருந்தனர். சைவ ஸ்தலங்களில் மிக முக்கியமான கோவிலான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் வைகுண்ட வாயில் திறப்பது ஐதீகம் ஆகும்.


 




செங்கம் அருள்மிகு ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில் வைகுந்த ஏகாதசி தினத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்த பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது இதனை தொடர்ந்து ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தார் இதில் செங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் திருக்கோவில் உட்பிரகாரத்தில் மேலதாளங்களுடன் வலம் வந்தார் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு புனித நீர், குங்குமம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.