தமிழ் நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் பணி தீவிரம் அடைந்துள்ளது . செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்துள்ள நிலையில் வரும் 13 ஆம் தேதிக்குப் பின்னர் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது .
வேலூர் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் அணைக்கட்டு , கணியம்பாடி , குடியாத்தம் , காட்பாடி , கே.வி குப்பம் , வேலூர் மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய 7 ஒன்றியங்கள் உள்ளது . 7 ஒன்றியங்களில் 14 மாவட்ட கவுன்சிலர்கள் , 138 ஒன்றிய கவுன்சிலர்கள் , 247 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் , 2071 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 2470 பதவிகளுக்குத் தேர்தல் நடத்தப்படவுள்ளது .
நடைபெறப்போகின்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக 1331 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது . மேலும் ஒன்றியங்கள் வாரியாக புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியடபட்டுள்ளது .
வேலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி விவரங்கள் :
வாக்குச்சாவடிகள் - 1331
மாவட்ட கவுன்சிலர் :- 14
ஒன்றிய கவுன்சிலர்கள் :- 138
ஊராட்சிகள் :- 247
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 2071
மொத்த வாக்காளர்கள் :- 7 ,16,984
ஆண் : 3,48,898
பெண் : 3,68,006
3-ம் பாலினம் 80
ஒன்றியம் வாரியாக விபரம் :
1)அனைக்கட்டு :
வாக்குச்சாவடிகள் - 249
மாவட்ட கவுன்சிலர் :- 3
ஒன்றிய கவுன்சிலர்கள் :- 26
ஊராட்சிகள் :- 51
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 417
மொத்த வாக்காளர் : 1,33,954
ஆண் - 65,513
பெண்- 68,412
3-ம் பாலினம் 29
2) குடியாத்தம் :
வாக்குச்சாவடிகள் - 288
மாவட்ட கவுன்சிலர் :- 3
ஒன்றிய கவுன்சிலர்கள் :- 31
ஊராட்சிகள் :- 50
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 426
மொத்த வாக்காளர் : 1,61,843
ஆண் - 79,567
பெண்- 82,262
3-ம் பாலினம் 14
3) கணியம்பாடி:
வாக்குச்சாவடிகள் - 121
மாவட்ட கவுன்சிலர் :- 1
ஒன்றிய கவுன்சிலர்கள் :- 13
ஊராட்சிகள் :- 24
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 201
மொத்த வாக்காளர் : 64,351
ஆண் - 31,055
பெண்- 33,295
3-ம் பாலினம் 1
4) காட்பாடி:
வாக்குச்சாவடிகள் - 221
மாவட்ட கவுன்சிலர் :- 2
ஒன்றிய கவுன்சிலர்கள் :- 21
ஊராட்சிகள் :- 41
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 330
மொத்த வாக்காளர் : 1,11,782
ஆண் - 54,081
பெண்- 57,678
3-ம் பாலினம் 23
5) கே.வி.குப்பம்:
வாக்குச்சாவடிகள் - 214
மாவட்ட கவுன்சிலர் :- 2
ஒன்றிய கவுன்சிலர்கள் :- 21
ஊராட்சிகள் :- 39
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 333
மொத்த வாக்காளர் : 1,10,087
ஆண் - 53,585
பெண்- 56,501
3-ம் பாலினம் 1
6) பேரணாம்பட்டு :
வாக்குச்சாவடிகள் - 139
மாவட்ட கவுன்சிலர் :- 2
ஒன்றிய கவுன்சிலர்கள் :- 15
ஊராட்சிகள் :- 24
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 213
மொத்த வாக்காளர் : 77,391
ஆண் - 37,362
பெண்- 40,024
3-ம் பாலினம் 5
7) வேலூர் :
வாக்குச்சாவடிகள் - 99
மாவட்ட கவுன்சிலர் :- 1
ஒன்றிய கவுன்சிலர்கள் :- 11
ஊராட்சிகள் :- 18
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 159
மொத்த வாக்காளர் : 57,576
ஆண் - 27,735
பெண்- 29,834
3-ம் பாலினம் 7
இறுதி வாக்காளர் பட்டியலில் வேலூர் மாவட்டத்தில் மோதல் 7 லட்சத்து , 16 ஆயிரத்து 984 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர் . இந்த வாக்காளர் பட்டியலின் நகல் வார்டு வாரியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் வாக்கு என்னும் மையங்களைத் தேர்ந்தெடுக்க அந்தந்த ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள் , கல்லூரிகளுக்கு சொந்தமான இடங்களைத் தேர்வுசெய்யுமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவு பிறப்பித்திருந்தார் . அதன்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட ஒரு குழு 7 ஒன்றியங்களிலும் 7 வாக்கு என்னும் மையங்களைத் தேர்வுசெய்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையாகச் சமர்ப்பித்துள்ளனர் .
இது தொடர்பாகத் தேர்தல் குழுவில் உள்ள ஒரு மூத்த அதிகாரி தெரிவிக்கும்போது , வேலூர் மாவட்டத்தில் 7 ஒன்றியங்கள் உள்ளது . இந்த 7 ஒன்றியங்களில் பதிவாகும் வாக்கு பேட்டிகள் அந்தந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட வாக்கு என்னும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு வாக்கு என்னும் நாள் அன்று பெட்டிகளைப் பிரித்து வாக்குகள் எண்ணப்படும் .
அதன்படி அணைக்கட்டு ஒன்றியத்திற்கு இறைவன்காடு அன்னை பாலிடெக்னீக் கல்லூரி , குடியாத்தம் ஒன்றியத்திற்கு கே எம் ஜி கல்லூரி , கே வி குப்பம் ஒன்றியத்திற்கு சென்னங்குப்பம் வித்யாலட்சுமி மெட்ரிக் பள்ளி , காட்பாடி ஒன்றியத்திற்குச் சட்டக்கல்லூரி , கணியம்பாடி ஒன்றியத்திற்கு துளசிஸ் பொறியியல் கல்லூரி , பேர்ணாம்பட்டு ஒன்றியத்திற்கு இஸ்லாமியக் காலை கல்லூரி , வேலூர் ஒன்றியத்திற்குத் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி , ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது .
இந்த பட்டியலை மாநில தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வந்தவுடன் வாக்கு என்னும் மையங்களைத் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார் .