கிருஷ்ணரி மாவட்டம் ஓசூர் அருகே தொரப் பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ரியாஸ் (28). கூலி வேலை பார்த்து வருகின்றார். இவரது மனைவி கோரிமா (27). இவர்களுக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கோரிமா 2 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் உபாதையால் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. கோரிமா, அங்குள்ள முருகேசன் என்பவரின் அக்குபஞ்சர் மையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில், நேற்று அங்கு சிகிச்சை பெற்ற கோரிமாவுக்கு திடீரென உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
Sri Lanka Crisis: இலங்கையில் கிடுகிடு விலை உயர்வு.. உணவுப் பஞ்சம்..தவிக்கும் மக்கள்.. Detail report!
இதனால் பதட்டம் அடைந்த அவருடைய கணவர் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கார் மூலம் அழைத்து சென்றுள்ளனர். அப்போது போகும் வழியிலேயே அவருடைய மனைவி கோரிமா உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரியாஸ் ஓசூர் நகர காவல்நிலையத்தில் இதைப்பற்றி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஓசூர் நகர காவல்துறையினர் மற்றும் மருத்துவத்துறையினர் முருகேசன் வைத்துள்ள அக்குபஞ்சர் மையத்திற்கு சென்றனர் அங்குள்ள ஒரு சில கடைகளில் முருகேசனை மருத்துவ முறையை பற்றி விசாரணை நடத்தினர். இதனை தெரிந்து கொண்ட போலி மருத்துவர் சிகிச்சை மையத்தை மூடிவிட்டு முருகேசன் தலைமறை ஆகிவிட்டார்.
இதையடுத்து மருத்துவத்துறையினர் காவல் துறை உதவியுடன் முருகேசனின் மெடிக்கல் செண்டரின் ஷட்டரின் பூட்டை உடைத்து சோதனை நடத்தினர். இதில் அவர் அக்குபஞ்சர் முறை மருத்துவம் என்று கூறி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த மருந்து பொருட்கள்,மற்றும் ஊசி மாத்திரைகளை போன்றவற்றை கண்டு சுகாதார துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு அங்கிருந்த பொருட்களை பறிமுதல் செய்து போலி மருந்து கடைக்கு சுகாதார துறையினர் சீல்வைத்தனர். மேலும் தலைமறைவான முருகேசனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இது குறித்து ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பூபதி கூறுகையில், ஆங்கில மருத்துவம் முறையாக படிக்காமல் முருகேசன் நோயாளிகளுக்கு அலோபதி சிசிச்சை அளித்துள்ளார் என்பது முழுமையாக தெரியவந்துள்ளது. மேலும் அங்கிருந்த அனைத்து மருத்துவ பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கர்ப்பிணியான கோரிமாக்கு முருகேசனின் தவறான சிகிச்சையால் தான் உயிரிழந்தார் என உடல்கூறாய்வில் கண்டறிந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். போலி மருத்துவம் பார்த்து ஒரு கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Actor Vivek: நடிகர் விவேக் மரணம் குறித்து விசாரணை: மனித உரிமை ஆணையம் உத்தரவு..!