திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் கிராமம் அருகே சென்னையில் இருந்து வந்தவாசி வழியாக அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. இதேபோன்று வேலூரில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி அரசு பேருந்து பயணிகளை ஏற்றக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது கீழ்கொடுங்காலூர் கிராமம் அருகே இரண்டு அரசு பேருந்துகளும் எதிர்பாராமல் நேருக்கு நேர் அதிபயங்கர சத்துடன் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. இந்த இரண்டு அரசு பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் சுமார் 32-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அதனைத்தொடர்ந்து மோதிக்கொள்ளும் சத்தம் கேட்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விபத்துக்குள்ளான இடத்திற்கு வந்து பேருந்தில் மாட்டிக்கொண்ட பயணிகளை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் கீழ்கொடுங்க நல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் விபத்து நடைப்பெற்ற இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த பயணிகளுக்கு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து காவல்துறையினர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து இரண்டு பேருந்துகளும் எவ்வாறு மோதிக்கொண்டது ஓட்டுநர்களின் அலட்சியத்தால் பேருந்து மோதிக்கொண்டதா அல்லது பேருந்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதா என காவல்துறையினர் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடமும், பயணிகளிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திமுக வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் வந்தவாசி அரசு மருத்துவமனைக்குச் நேரில் சென்று விபத்தில் படுகாயம் அடைந்த பயணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தோம் பயணிகளுக்கு ஆறுதலை தெரிவித்தார். இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 32 பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள பந்தராவல்லி கிராமத்தைச் சோந்தவா் சின்னபையன் வயது (65), இவருடைய மனைவி ஆராஞ்சி வயது (60), இந்த தம்பதியினரின் மகன் பழனி பழனி (39), உறவினா்கள் தங்கவேல் வயது (49), ராமலிங்கம் வயது (50) ஆகியோருடன் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகேயுள்ள உறவினா்கள் இல்லத்தின் துக்க நிகழ்விற்கு பங்கேற்று விட்டு, இரவு காரில் பந்தராவல்லிக்கு ஐந்து நபர்கள் காரில் திரும்பிக் கொண்டிருந்தனா்.இந்த காரை பழனி என்பவர் ஓட்டிவந்தார். அப்போது திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கம் அருகேயுள்ள அரசங்கண்ணி பகுதியில் அதிகாலையில் காரும், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்குச் சென்ற டேங்கா் லாரியும் நேருக்கு நோர் அதிபயங்கர சத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், காரிலிருந்த சின்னபையன், அவரது மனைவி ஆராஞ்சி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காரை ஓட்டிய பழனி, தங்கவேல், ராமலிங்கம் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்தகவலறிந்த மேல்செங்கம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 3 நபர்களையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், 3 நண்பர்களுக்கு தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோக்கப்பட்டனா். செங்கம் மருத்துவமனையில் பழனி உயிரிழந்தாா். விபத்து குறித்து மேல்செங்கம் காவல் நிலைய ஆய்வாளா் செல்வராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.