திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டு அருகில் உளள கெங்கைசூடாமணி கிராமத்தில் தனியார் பள்ளியில் யூ.கே.ஜி படிக்கும் சிறுமிக்கு சில தினங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு பள்ளியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளான சிறுமியிடம் பெற்றோர் காவல் துறையினர் அதிகாரிகள் முன்னிலையில் பல்வேறு நபர்களின் புகைப்படத்தை வைத்து கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி பள்ளி தாளாளரின் கணவர் காமராஜை அடையாளம் காட்டியதாகவும் பலமுறை புகைப்படத்தை மாற்றி வைத்தும் சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படத்தை எடுத்துவிட்டு கேட்ட போதும் பள்ளியின் தாளாளர் கணவரின் புகைப்படத்தை பாதிப்புள்ளாகிய சிறுமி அடையாளம் காட்டியதாக சொல்லப்படுகிறது. அதனையடுத்து காவல்துறையினர் காமராஜின் செல்போன் சிக்னலை வைத்து திருச்செந்தூர் அருகில் எட்டையபுரம் பகுதியில் கைது செய்து நேற்று அதிகாலை திருவண்ணாமலை அழைத்து வந்தனர்.


 




 


இதற்கு முன்னதாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் காமராஜ் சேத்பட் அருகே உலகப்பட்டு கிராமத்தில் உள்ள அரசுபள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருவது தெரிய வந்தது. காமராஜின் மனைவி தாளாளராக உள்ள பள்ளிக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில் காமராஜ் 4 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போளுர் அனைத்து மகளிர் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் சம்பவ இடத்தில் நேரில் சென்று பார்வையிட்டு மாணவியின் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பலநபர்களிடமும் விசாரணை மேற்கொண்டர். மேலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தில் கைரேகைகளையும் சேகரித்துள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார். பின்னர் இந்த சம்பவமாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பள்ளி ஆசிரியர் காமராஜை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


 




பின்னர் நேற்று காலை முதல் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக போளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் காமராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர் ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். இரவு காமராஜை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று பின்னர் திருவண்ணாமலை போக்சோ நீதிமன்ற நீதி அரசர் முன்பாக ஆஜர் படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் நாளை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார். மேலும் அதே பள்ளியில் போக்குவரத்து மேலாளராக இருப்பதாக சொல்லப்படும் கார்த்திபனை காலை முதல் போலீசார் தனி இடத்தில் வைத்து ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.