தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலமையில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்று வரும். இந்நிலையில் மக்கள் குறைகளை அந்த அந்த மாவட்டங்களில் இருக்க கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் மக்களின் குறைகளை நேரடியாக சென்று தீர்த்து வைக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மக்களின் குறைகளை களைந்து அவர்களுக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மக்களிடம் நேரடியாகச் சென்று மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் மூன்று நாட்கள் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது , அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தபட்டு மக்களிடம் இருந்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர்  மனுக்களை நேரடியாக பெற்று அதற்கான உரிய நடவடிக்கை  எடுக்கபடும் என தெரிவித்தனர்.




இதானை தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று திருச்சி மாவட்டத்தில் 4 தொகுதிகளில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்  நடைபெற்றது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர், மணப்பாறை, திருவெறும்பூர்,திருச்சி கிழக்கு,துவரங்குறிச்சி, ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமில்  பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளபடும் என தெரிவித்தனர். மேலும் அதிக அளவில் திருச்சி மாவட்டத்தில் அடிப்படை வசதிகள், பட்டா பிரச்சனை, குடிநீர் பிரச்சனை என தொடர்ந்து மக்கள் தெரிவித்து வருகிறார்கள் அவற்றை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கபடும் என அமைச்சர் நேரு தெரிவித்தார்.




முன்னதாக திருச்சி மாவட்டத்தில் சித்த மருத்துவ கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் நேரு மேடையில் பேசும்போது, சித்த மருத்துவம் என்பது உடலுக்கு நன்மையை தரும் என்றும், ஆயுர்வேதா மருந்துக்கள் அவ்வபோது உடலுக்கு எடுத்துக்கொள்வது. ஆனால் சித்தமருத்துவம் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தரவல்லது என்றார். மேலும் சித்த மருத்துவத்தால் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உடலில் சர்க்கரையின் அளவு குறைந்துள்ளது; ஆனால் அரசியலுக்கு வந்து பாருங்கள் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என்று அமைச்சர் நேரு  தெரிவித்தார். குறிப்பாக வரும் சட்டபேரவை கூட்டத்தொடரில் திருச்சியில் சித்த மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பான அறிவிப்பு வரும் என உறுதி அளிக்கிறேன், அதேபோல் திருச்சி மாநகரை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 30 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார் எனறும் தெரிவித்தார்.