ஒரு மணிநேரம்... ஒரே மணிநேரம்தான்... திருச்சியில் இருந்து சும்மா விர்ர்ர்...ன்னு போயிடலாம் - எங்கு தெரியுமா?
Trichy to Jaffna Flight Service: தமிழகத்தின் நடுநாயகமான திருச்சியில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தேவை என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருந்து வந்தது.

திருச்சி: ஒரு மணிநேரம்தான்... ஒரே மணிநேரம்... திருச்சியிலிருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு சும்மா விர்ர்ர்...ன்னு போயிடலாம். 47 ஆண்டுகளுக்கு பின் நேரடி விமான சேவை என்பதால் பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
திருச்சி- இலங்கையின் யாழ்ப்பாணம் இடையே 47 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. திருச்சி- யாழ்ப்பாணம் இடையேயான பயண தூரம் வெறும் 1 மணிநேரம் தான். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றதால் தமிழர்களின் பூர்வீக பூமியான யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையம், இலங்கை ராணுவத்துக்கான விமான தளமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
Just In




பலாலி விமான நிலையம் மூலமான அனைத்து பயணிகள் விமான சேவைகளும் தடை செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து இலங்கையில் 2009-ம் ஆணடு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பலாலி விமான தளமும் சீரமைக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு பலாலியில் முகாமிட்டிருந்த இலங்கை ராணுவம் வெளியேற்றப்பட்டு பொதுமக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.
அப்போது, இந்தியாவின் நிதி உதவியுடன் பலாலி விமான நிலையம் முழுமையாக சீரமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் இது பலாலி சர்வதேச விமான நிலையமாகவும் புத்துயிர் பெற்றது. 2019-ம் ஆண்டு யாழ்ப்பாணம் விமான நிலையம், விமான சேவைகளுக்காக திறக்கப்பட்டது. தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பயணிகள் விமானம் இயக்கப்பட்டன.
இடையில் கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் சென்னை- யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டு நாள் தோறும் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு செல்லும் வசதி இருந்தாலும் தமிழகத்தின் நடுநாயகமான திருச்சியில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தேவை என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருந்து வந்தது. கோரிக்கைளும் எழுந்து வந்தது. இதன் அடுத்த கட்டமாக தமிழ்நாட்டின் திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் யாழ்ப்பாணத்துக்கு விமான சேவைகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் ஒரு பகுதியாகவே திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை தொடங்கப்பட்டது. திருச்சியில் இருந்து மதியம் 1.25 மணிக்கு புறப்படும் விமானம் ஒரே ஒரு மணி நேரம்தான் சும்மா விர்ர்ன்னு 2.25 மணிக்கு யாழ்ப்பாணத்திற்கு சென்றடைகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 4.05 மணிக்கு திருச்சிக்கு வந்திடும்.
இண்டிகோ நிறுவனம் இந்த விமான சேவையை இயக்குகிறது. 47 ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை இயக்கப்படுவது மக்கள் மற்றும் விமானப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை திருச்சியில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்குதான் நாள்தோறும் 2 விமானங்கள் இயக்கப்பட்டன.
திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்வோர் இந்த விமான சேவைகளை பயன்படுத்தி வந்தனர். இதற்கு அதிகமான கட்டணமும் செலுத்தி வந்தனர். தற்போது யாழ்ப்பாணத்துக்கு திருச்சியில் இருந்து விமானம் இயக்கப்படுவதால் குறைவான கட்டணத்தில் இலங்கையை சென்றடைந்து விடலாம்ட. அதேபோல தமிழ்நாட்டில் இருந்து உணவுப் பொருட்களை இலங்கை தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைவாக கொண்டு சேர்க்கவும் முடியும்.
திருச்சி- யாழ்ப்பாணம் இடையேயான விமான கட்டணமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல கட்டணம் ரூ5,900 முதல் ரூ6,400 வரை மட்டுமே. அப்புறம் என்ன குறைந்த கட்டணம், பயண நேரமும் மிகவும் குறைவு. விமான பயணிகள் செம கூல்… சுற்றுலா நாடாக விளங்கும் இலங்கைக்கு செல்ல விரும்பும் சுற்றுலாப்பயணிகளுக்கும் இந்த விமான சேவையால் செம ஹேப்பிதான் போங்க.
முதல்நாள் தொடங்கிய திருச்சி- யாழ்ப்பாணம் சேவையில் சரியாக மதியம் 02.02 மணிக்கு பலாலி விமான நிலையத்தை செள்றடைந்த விமானத்தில் 27 பயணிகள் பயணம் செய்தனர். மீண்டும் பலாலியிலிருந்து 36 பயணிகளுடன் மதியம் 3 மணியளவில் விமானம் திருச்சிக்கு புறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.