Dolby Cinemas in Trichy: என்னதான் சினிமாவை பார்ப்பதற்கு OTT தளங்கள் வந்துவிட்டாலும், திரையரங்கிற்கு சென்று சினிமாவை பார்ப்பது என்பது அலாதிய இன்பம் தான். அதிலும் ஒரு சில திரைப்படங்களை திரையரங்கில் பார்த்தால் மட்டுமே, அதன் முழு சுவாரசியத்தையும் அனுபவிக்க முடியும். இந்திய மார்க்கெட் சந்தையில் சிறிய திரையரங்குகள் பெரிய அளவில் லாபம் இல்லாமல் இருந்தாலும், பெருநகரங்களில் செயல்பட்டு வரும், பெரிய திரையரங்குகள் லாபத்துடனே செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

திரையரங்கில் அசுர வளர்ச்சி

சினிமா தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒவ்வொரு தொழில்நுட்பமும், பார்வையாளர்களை கவரும் வகையில் இருந்து வருகிறது. பல்வேறு வகைகளில் இந்த தொழில்நுட்பம் அமைந்திருக்கின்றன. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக, திரையரங்குகளில் புதுப்புது தொழில்நுட்பங்கள் கொண்டு வந்து பார்வையாளர்களுக்கு புதிய அனுபவங்களை கொடுத்து வருகிறது.

இந்தியாவில் டால்பி சினிமா Dolby Cinemas in India 

அந்த வகையில் உலக அளவில் முன்னணி நிறுவனமான, டால்பி லேபரட்டரீஸ் இந்தியாவில் தனது திரையரங்குகளை, டால்பி சினிமாவை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் 14 நாடுகளில், இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த வருடமே அதற்கான பணிகளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திருச்சியில் L.A சினிமா, புனேவில் சிட்டி பிரைட், ஹைதராபாத்தில் Allu காம்ப்ளக்ஸ், பெங்களூரில் AMB சினிமாஸ், கொச்சியில் EVM சினிமாஸ், உலிக்கல் G சினிபிக்ஸ் ஆகிய இடங்களில், டால்பி சினிமா அமைய உள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சிறப்பம்சங்கள் என்ன ?

டால்பி சினிமா பார்வையாளர்களுக்கு ஒப்பற்ற காட்சி மற்றும் ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக ஆடியோவில் புதிய பரிமாணத்தில் அமைய இருக்கிறது. இந்தியாவில் டால்பி சினிமாஸ் தொடங்குவது, இந்தியாவின் பொழுதுபோக்கு சந்தையில் முக்கிய பங்களிக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

குறிப்பாக இந்த திரையரங்குகளில், அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கும் திரைப்படங்களை திரையிட முடியும். குறிப்பாக படத்தை தயாரிப்பாளர்கள், எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் முதன்முறையாக திருச்சியில் அமைய உள்ளது, அப்பகுதி சினிமா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.