Accident: காலையிலே சோகம்! 4 பேர் மரணம்! சமயபுரத்திற்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதிய சரக்கு வேன்

திருச்சி சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரைச் சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்

Continues below advertisement

ஆடி மாதம் இன்று பிறந்தது. ஆடி மாதத்தை முன்னிட்டு புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். அந்த வகையில் திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அவர்களில் ஏராளமானோர் பாதயாத்திரையாக கோயிலுக்கு வருவது வழக்கம்.

Continues below advertisement

4 பக்தர்கள் உயிரிழப்பு:

அவ்வாறு தஞ்சையில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சமயபுரம் கோயிலுக்குச் இன்று அதிகாலை முதலே சென்றனர். தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வளம்பக்குடி கிராமம். இங்கு இன்று காலையில் பக்தர்கள் சிலர் பாதயாத்திரையா சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியே சென்ற சரக்கு வாகனம் ஒன்று பக்தர்கள் மீது மோதியது.

இதில், 4 பக்தர்கள் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவத்தில் சிக்கிய பக்தர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பெரும் சோகம்:

அவர்கள் காயமடைந்தவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடி பிறப்பை முன்னிட்டு பாதயாத்திரையாக கோயிலுக்கு சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மட்டுமின்றி, பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement