12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள், தற்போது அதாவது மே 6ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை டிபிஐ வளாகத்தில் வெளியிடப்பட்டது. மாணவர்கள் www.tnresults.nic.in மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். தொடர்ந்து மார்ச் 23-ம் தேதி முதல் மாணவர்களின் விடைத் தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே இருந்து திருத்துதல் முகாம்களுக்கு விடைத் தாள்கள் மார்ச் 28-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து விடைத்தாள் திருத்தம் பணி ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 13ஆம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெற்றது.

  




இந்நிலையில் இன்று பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு காண முடிவு வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கீழ்க்கண்ட இணைய வழி மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது


www.dge1.tn.nic.in , 
www.dge2.tn.nic.in , 
www.dge.tn.gov.in ,
www.tnresults.nic.in


ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளன. மாணவர்கள் 92.37 சதவிகிதமும் மாணவிகள் 96.44 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.




திருச்சி மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைவு 


இந்நிலையில் திருச்சி கல்வி மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சியின் ஒரு பள்ளி உள்பட 89 அரசு பள்ளிகளும், 46 அரசு உதவி பெறும் பள்ளிகளும், அரசின் பகுதி உதவி பெறும் 28 பள்ளிகளும், 81 தனியார் மெட்ரிக் பள்ளிகளும், 13 ஆதிதிராவிடர் நல பள்ளிகளும், ஆதிதிராவிட பழங்குடியினருக்கான ஒரு  உண்டு உறைவிடப்பள்ளியும்  என மொத்தம் 260 மேல்நிலை பள்ளிகள் உள்ளது. இதில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் திருச்சி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 371 மாணவர்களும், 16 ஆயிரத்து 244 மாணவிகளும் என மொத்தம் 29 ஆயிரத்து 615 மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வு எழுதினார்கள்.


மேலும் (2020-21) கல்வி ஆண்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையும், +2 மாணவர்களுக்கு 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கப்பட்டது. (2019-20) ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 95.94% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த கல்வியாண்டில் (2021-22) திருச்சி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 95.93% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நடப்பு கல்வியாண்டில் (2022 - 2023) திருச்சி மாவட்டத்தில் 96.02 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்தாண்டு திருச்சி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.74% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 93.42%, மாணவிகள் 97.65% தேர்ச்சி பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக  மேடம் இந்த பொதுத் தேர்வை 1,261 பேர் இந்த தேர்வை எழுதவில்லை. மேலும் கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.