திருச்சி என்றாலே கொளுத்தும் வெயில், காவிரி ஆறு, முக்கொம்பு, கல்லனை, பெரிய அளவில் சுற்றி பார்க்க கோவில்கள், வரலாற்று சின்னம் ஆகையவை தான் என பொதுவாக அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் இயற்கையின் அழகை மொத்தமாக தன்னுள் கொண்டுள்ள ஒரு இடம் உள்ளது அது எது தெரியுமா வாங்க பார்க்கலாம். புளியஞ்சோலை தமிழகத்தின், கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள கொல்லிமலை பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. அதே இடத்தில் அடர்ந்த காடுகளில் சுமார் 30 குடும்பங்கள் உள்ளன. இது திருச்சிராப்பள்ளியில் இருந்து சுமார் 70 கி.மீ தூரத்தில் துறையூர் அருகே அமைந்துள்ளது. வடமாவட்டங்களில் இருந்து வருவோர் சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து தம்மம்பட்டி வழியாக புளியஞ்சோலையை அடையலாம். கொல்லி மலையில் இருந்து வரும் மூலிகை கலந்த நீர் இங்கு உள்ள பாறைகளில் சலசலவென ஓடுகிறது. இது பார்ப்பதற்கே ஒரு புத்துணர்ச்சியை அளிக்கிறது.




நீரின் சலசலப்பும், இயற்கையான சூழலும் நாம் ஒரு மலைப் பிரதேசத்திற்குள் இருக்கிறோம் என்ற உணர்வை உருவாக்குகிறது. மேலும் அங்கே விற்கப்படும் மலைத்தேன், பலா, அன்னாசி போன்ற பழங்களையும் வாங்கி சுவைத்துக்கொண்டு இங்கு நீரில் நன்றாக ஆட்டம் போடலாம். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் விடுமுறை நாட்களில் தங்களுடைய நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இங்கு வந்து பொழுதை கழிக்கிறார்கள். இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற இடமாக இந்த புளியஞ்சோலை அமைந்துள்ளது. சுற்றி எங்கு பார்த்தாலும் இயற்கையினால் சூழப்பட்டுள்ளது.  




குறிப்பாக பல நாட்களாக எங்கும் செல்லாமல் தங்களது மகிழ்ச்சியை தொலைத்தவர்கள் இங்கு வந்து இந்த இயற்கையின் அழகு அம்சத்தை அனுபவிக்கலாம். அதுவும் நண்பர்களுடன் வரும்போது அது மறக்கமுடியாத அனுபவமாக அமையும். அதுமட்டுமன்றி இங்கு வாழும் மக்கள், காடுகளில் வளர்க்கும் பழங்களைச் சேகரித்து உள்ளூர் சந்தைகளில் அப்பழங்களை விற்கின்றனர். இங்கு, பல  வருடங்களுக்கு முந்தைய பாறைகள், குகைகள், கோயில்கள் என பல இருக்கின்றன. மேலும் இங்கிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் காட்டு வழியாக சென்றால் ஆகாய கங்கை அருவி, சித்தர்கள் வாழ்ந்த குகை, மற்றும் பழங்குடியினர் வாழ்விடம் போன்றவற்றையும் நாம் கண்டு களிக்கலாம். ஆகாய கங்கை எனப்படும் மலை உச்சியில் வேறு சில நதிகளும் உருவாகின்றன. கொல்லிமலையில் பார்க்கவேண்டிய இடங்களில் முக்கியமான இடம் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியும் ஒன்று. ஆனால் இங்கு நாம் தனியாகவோ, அல்லது இருவரோ செல்வதைவிட குழுவாக நிறைய பேர் செல்வதே பாதுகாப்பானது.




திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய சுற்றுலா தலங்களில் முதன்மையாக இருக்கக்கூடியது, புளியஞ்சோலை சுற்றுலா தளம் ஆகும். மேலும் பள்ளி,  கல்லூரி மாணவர்கள்.  விடுமுறை என்றாலே நண்பர்களுடன் உடனே  புறப்பட்டு புளியஞ்சோலை சென்று மகிழ்ச்சி அடைவார்கள். மேலும் இங்கு சென்றால்  காலை முதல் மாலை வரை முழுவதுமாக அருவிகளில் குளியல், மழை காடுகளில் விளைந்த பழங்கள் உணவாக எடுத்துக் கொண்டு மிகுந்த மகிழ்ச்சியோடு அன்றைய பொழுதை போக்கலாம். மேலும் பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்கள் எதுவாக இருந்தாலும் அருகில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான புளியஞ்சோலை குடும்பத்துடன் சென்று அன்றைய பொழுதைக் கழிப்பதும், அருவிகளில் குளிப்பது குழந்தைகள் விளையாடுவதை மகிழ்ச்சியாக அன்றைய பொழுதைக் கழிக்கலாம். திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்கள் என குடும்பத்துடன் அன்றைய பொழுதை மகிழ்ச்சியாக கழிப்பதற்கு புளியஞ்சோலை தான் முதன்மையான இடம் என்று தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் குடும்பத்துடன் சென்று இயற்கையின் அழகை ரசித்து, நீரில் நன்றாக ஆட்டம் போட்டு கொண்டாடு